››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

தேசிய பாதுகாப்பு கற்கைகளுக்கான நிலையத்தின் மாதாந்த கலந்துரையாடல்

தேசிய பாதுகாப்பு கற்கைகளுக்கான நிலையத்தின் மாதாந்த கலந்துரையாடல்

[2017/04/26]

இலங்கை தேசிய பாதுகாப்பு கற்கைகளுக்கான நிலையத்தின் மாதாந்த பாதுகாப்பு கலந்துரையாடல் இன்று (ஏப்ரல் .25) பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்றது. குறித்த கலந்துரையாடல் ( பாராளுமன்ற விவகாரம் , கொள்கை மற்றும் திட்டமிடல்)- மேலதிக செயலாளர் திரு. ஆர். பி. ஆர் .ராஜபக்ஸ அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

இக் கலந்துரையாடலில் உள்நாட்டு மற்றும் பிராந்திய - “நீர் சவால்கள் மற்றும் இந்தியாவினுடைய பதிலும்”- எனும் தொனிப்பொருளில் சிறப்புப் பேச்சாளராக வருகைதந்திருந்த வைத்திய கலாநிதி உட்டம் குமார் சின்ஹ அவர்களால் நிகழ்த்தப்பட்டது.

வைத்திய கலாநிதி சின்ஹ அவர்கள் பாதுகாப்பு கற்கைகள் மற்றும் ஆய்வுகள் கல்விநிலையத்தின் சக உறுப்பினரும், இந்தியாவின் பனாராஸ் இந்து பல்கலைக்கழக சமாதான ஆய்வுகளுக்கான மாலாவியா நிலையத்தின் சிறப்பு விரிவுரையாளராகவும் திகழ்வதுடன், ரோட்லேட்ஜ் ஆல் வெளியிடப்பட்ட மூலோபாய பகுப்பாய்வுகளுக்கான நிர்வாக இயக்குனராகவும் திகழ்கிறார். மேலும் இந்தியாவின் பாதுகாப்பு கற்கைகள் மற்றும் ஆய்வுகள் கல்விநிலையத்தில் இடம்பெற்ற நீர் வளப்பாதுகாப்பு தொடர்பாக தென் ஆசியா பாதுகாப்பு ஒத்துழைப்பிற்கான சபையின் பிரதிநிதிகள் குழு சார்பாக வைத்திய கலாநிதி சின்ஹ அவர்கள் ட்ரெக் 2 கலந்துரையாடல் செயற்பாடுகளில் முழுமையாக ஈடுபட்டிருந்தார். அத்துடன் இவர் 2016ம் ஆண்டு பென்டகன் அச்சகத்தினால பிரசுரிக்கப்பட்ட தென் ஆசியாவில் அரசியல் – (ஹைட்ரோ- சுற்றுப்புற நதி) எனும் தலைப்பிலான புத்தகத்தின் பதிப்புரிமைக்குரியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், வைத்திய கலாநிதி சின்ஹ அவர்கள் 21ம் நூற்றாண்டில் தென் ஆசியாவில் நீர் மற்றும் சுற்றுப்புற நதி என்பவற்றினுடைய செயற்பாட்டு முறையினுடைய முக்கியத்துவம் பற்றி தெளிவுபடுத்தினார். அரச கொள்கைகளில் பிரதானமான பகுதியாக நீர் காணப்படுவதாக குறிப்பிட்ட அவர், இந்தியா மற்றும் பாகிஸ்தான் அரசுக்கு இடையே இந்து நதி ஒப்பந்த விடயம் தொடர்பாகவும் சுட்டிக்காட்டினார். 1960ம் ஆண்டுகளின் தொடக்கத்தில் இருந்து இரு நாடுகளுக்கிடையிலான ஒப்பந்தம் தொடர்ந்தும் நிலை பெற்று வருவதாகவும் குறிப்பிட்டார். இதேவேளை, தென் ஆசியாவில் ஆறுகள் பிராந்திய ஒத்துழைப்பிற்கு பிரதானமாக விளங்குவதாகவும் தனது முன்வைப்பின் இறுதியில் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் இலங்கையின் தேசிய பாதுகாப்பு கற்கைகளுக்கான நிலையத்தின் பணிப்பாளர் திரு அசங்க அபேகுனசேகர, முப்படையின் சிரேஷ்ட அதிகாரிகள், மற்றும் விஷேட அதிதிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர.

     செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்