››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

யுத்த வீரரின் பெற்றோருக்கு இராணுவத் தளபதியினால் புதிய வீடு அன்பளிப்பு

யுத்த வீரரின் பெற்றோருக்கு இராணுவத் தளபதியினால் புதிய வீடு அன்பளிப்பு

[2017/04/27]

 

இலங்கை இராணுவம் மனிதாபிமான நடவடிக்கையின்போது தனதுயிரை தியாகம் செய்த யுத்த வீரரின் பெற்றோருக்கு புதிதாக நிர்மாணிக்கப்பட்ட வீடொன்றினை இன்று (ஏப்ரல் .26) அன்பளிப்பு செய்துள்ளது. இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் கிரிஷாந்த டி சில்வா அவர்களின் தீர்மானத்திற்கு இணங்க வயோதிபமுற்ற இப்பெற்றோரின் பொருளாதார நிலை மற்றும் அவர்களின் ஆரோக்கியம் என்பவற்றை கருத்தில்கொண்டு குறித்த வீடு வழங்கப்பட்டுள்ளதாக இராணுவத்தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, 2009 ஜனவரி 15ம் திகதி கிளிநொச்சி தர்மபுரம் பகுதியில் இடம்பெற்ற மனிதாபிமான நடவடிக்கையின் போது நாட்டுக்காக தனதுயிரை தியாகம் செய்த இலங்கை சிங்க படைப்பிரிவை சேர்ந்த கோப்ரல் எம் பி லக்மால் என்பவரின் பெற்றாருக்கே குறித்த வீடு அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது.

குறித்த வீட்டினை நிர்மாணிப்பதற்கான ஆரம்ப நிதியுதவியினை படை தளபதிகளின் நிதியம் ஊடாக மேற் கொள்ளப்பட்டுள்ளதுடன். ராகம பகுதியில் காணித்துண்டு ஒன்றும் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது. இவ்வீட்டினை நிர்மாணிப்பதற்கு இலங்கை சிங்க படைப்பிரிவு, இராணுவ விவகாரங்கள் பணியகம், மறுசீரமைப்பு பணியகம் மற்றும் சில நன்கொடையாளர்கள் உள்ளிட்டோர் நிதியுதவியினை வழங்கியுள்ளனர். இத்திட்டத்திற்காக சுமார் 3.8 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுக்றது.

இராணுவத்தளபதி லெப்டினன்ட் ஜெனரல் கிரிஷாந்த டி சில்வா அவர்களால் யுத்த வீரரின் பெற்றோரான திரு எம் ஆரியவன்ச மற்றும் திருமதி டி நந்தனி ஆகியோரிடத்தில் இப்புதிய வீட்டுக்கான சாவி கையளிக்கப்பட்டுள்ளது.செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்