››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் மத சடங்குகளில் கலந்து கொண்டார்

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் மத சடங்குகளில் கலந்து கொண்டார்

[2017/04/28]

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ. ருவன் விஜேவர்தன் அவர்கள் அனுரதாபுரம் ரஜமஹா விகாரையில் இடம்பெற்ற மதசடங்குகள் பலவற்றில் கலந்து கொல்லும் வகையில் அனுரதாபுரத்திற்கான விஜயம்மொன்றினை இன்று (ஏப்ரல், 27) மேற்கொண்டார்.

மேலும் அவர், எதிர் வரும் பொசன் போய தினத்தை முன்னிட்டு மிஹிந்த்தலை தாதுகோபத்திற்கு வெள்ளை வர்ணம் பூசும் புண்ணிய நிகழ்வினை சட்ட ஒழுங்கு மற்றும் தென்மாகாண அபிவிருத்தி அமைச்சர் கௌரவ. சாகல ரத்னாயாக்க அவர்களுடன் இணைந்து பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ஆரம்பித்து வைத்தார்.

இதன்போது மிஹிந்தலை ரஜமஹா விகாரையின் பிரதம விகாராதிபதி வணக்கத்துக்குரிய வலயஹன்குனவவே தம்மரத்ன தேரர் அவர்களின் தலைமையில் நிகழ்த்தப்பட்ட சமய அனுஸ்டானங்களிலும் கலந்து கொண்டார். அத்துடன் எதிர் வரும் பொசன் போய தினத்தை முன்னிட்டு விகாரையில் இடம்பெற்ற விஷேட வழிபாட்டு வைபவத்தில் அமைச்சர் ரத்னாயக்க, இராஜாங்க அமைச்சர் விஜேவர்தன ஆகியோர் உள்ளிட்ட பக்தர்கள் பலர் ஈடுபட்டனர்.

இந்நிகழ்வில் மகா சங்க நாயக்க தேரர்கள், விமானப்படை அதிகாரிகள், விமானப்படை சிப்பாய்கள் லேக் ஹவுஸ் பத்திரிக்கை நிறுவனத்தின் சிரேஷ்ட அதிகாரிகள், அரச அதிகாரிகள் மற்றும் பெருமளவிலான பக்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

     

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் மத சடங்குகளில் கலந்து கொண்டார்.



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்