››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

பொதுமக்களுக்கான மருத்துவ பணிகளுக்கு கடற்படையினர் உதவி

பொதுமக்களுக்கான மருத்துவ பணிகளுக்கு கடற்படையினர் உதவி

[2017/05/01]

அண்மையில் காங்கேசன்துறை மாவடிபுரம் மாதிரி கிராமத்தில் மீளக்குடியமர்ந்த பொதுமக்களுக்கான நடமாடும் மருத்துவ முகாம் ஒன்று அண்மையில் (ஏப்ரல்,30) இலங்கை கடற்படையின் வடபிராந்திய கட்டளையகத்தினால் முன்னெடுக்கப்பட்டன.

இலங்கை கடற்படையினரால் முன்னெடுக்கப்பட்டுவரும் சமூக அபிவிருத்தி மற்றும் சமூக பொறுப்புவாய்ந்த திட்டங்களின் தொடராக இக்குறித்த செயற்றிட்டமும் முன்னெடுக்கப்பட்டது. இதில் மாவடிபுரத்தைச் சேர்ந்த சுமார் 160 குடும்பங்கள் கலந்து கொண்டு தமது சுகாதாரப் பிரச்சினைகளுக்கான தீர்வினைப் பெற்றுக்கொண்டனர்.

இதேவேளை, பலநாள் மீன்பிடிக்காக சென்றிருந்த மீனவர் ஒருவருக்கு ஏற்பட்ட கடுமையான சுகயீனம் காரணாமாக அவரை மருத்துவ உதவிகளுக்காக கரைக்கு கொண்டுவருவதற்கு உதவியளித்ததாக கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றது.

இலங்கை கடலோர பாதுகாப்பு படையினரிடம் இருந்து இலங்கை கடற்படையின் தென்பிராந்திய கட்டளையாகத்திற்கு கிடைக்கப்பெற்ற தகவல்களுக்கமைவாக விரைந்து செயற்பட்ட கடற்படையினர், குறித்த மீனவரை அதிவிரைவு தாக்குதல் படகின் மூலம் கரைக்கு கொண்டுவந்தனர். மேலும் அக்குறித்த மீனவர், மேலதிக சிகிச்சைகளுக்காக கராப்பிட்டிய போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

     



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்