››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

கோவை கப்பல் தளத்தில் “SLNS சிந்துறால” ஆழ்கடல் ரோந்துக் கப்பல் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைப்பு

கோவா கப்பல் தளத்தில் “SLNS சிந்துறால” ஆழ்கடல் ரோந்துக் கப்பல் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைப்பு

[2017/05/05]

அண்மையில் (மே .02) இந்தியா கோவா கப்பல் தளத்தில் நிர்மாணிக்கப்பட்டுவந்த இரண்டாவது உயர் ரக ஆழ்கடல் ரோந்துக் கப்பல் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. “எஸ் எல் என் எஸ் சிந்துறால” எனும் இலங்கை இக்கப்பல் ஆரம்ப வைபவநிகழ்வு பாதுகாப்பு தயாரிப்புகளுக்கான செயலாளர் ஸ்ரீ ஏ கே குப்தா அவர்கள் தலைமையில் இடம்பெற்றதாக கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிகழ்வில் இலங்கை கடற்படையின் வடபிராந்திய கட்டளைத்தளபதி ரியர் அட்மிரல் ஜயந்த டி சில்வா அவர்களின் தலைமையிலான இலங்கை கடற்படை பிரதிநிகள் குழுவினர் கலந்துகொண்டனர்.

குறித்த கப்பல் 2350 தொன் நிறைகளை எடுத்துச்செல்லும் வகையில் 105.7 மீட்டார் நீளம் மற்றும் 13.6 மீட்டார் அகலம் கொண்டதாகவும் நிர்மாணிக்கப்படுள்ளது. மேலும் 18 அதிகாரிகள் மற்றும் 100 மாலுமிகளுக்கான தங்குமிட வசதிகளையும் கொண்டிருப்பதுடன் 4,500 கடல் மைல்கள் தொலைவில் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையிலும் மற்றும் உலங்குவானூர்திகளை எடுத்துச்செல்லும் வகையிலான தளத்தினை கொண்டுள்ளதாகவும் நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்