››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

கண்காட்சியில் பங்குகொள்வதற்காக இலங்கை கடற்படை கப்பல்கள் சிங்கப்பூர் பயணம்

கண்காட்சியில் பங்குகொள்வதற்காக இலங்கை கடற்படை கப்பல்கள் சிங்கப்பூர் பயணம்

[2017/05/06]

இலங்கை கடற்படையின் ஆழ்கடல் ரோந்துக் கப்பல்களான எஸ் எல் என் எஸ் சாகர மற்றும் எஸ் எல் என் எஸ் நந்திமித்ர நேற்று (மே .05) சிங்கப்பூர் புறப்பட்டுச் சென்றன. குறித்த கப்பல்கள் சிங்கப்பூரில் நடைபெற இருக்கும் சர்வதேச கடல்சார் பாதுகாப்பு கண்காட்சியில் பங்குகொள்வதற்காக கொழும்பிலிருந்து புறப்பட்டுச் சென்றதாக கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், இக்கண்காட்சியில் பங்குகொள்வதற்காக 34 கடற்படை அதிகாரிகள் உட்பட 290 கடற்படை வீரர்கள் கலந்துகொள்ள உள்ளதுடன், குறித்த கப்பல்கள் இம்மாதம் 12ம் திகதி முதல் 18ம் திகதி வரை தரித்து நிற்கும். இதன்போது, இலங்கை கடற்படை வீரர்கள் யுத்தக்கப்பல்களின் காட்சிப்படுத்தல், சர்வதேச கடல்சார் பாதுகாப்பு மாநாடு, சர்வதேச கடற்படை பொறியியல் மாநாடு, கடற்படை வலையமைப்பு நிகழ்சிகள் போன்ற பல நிகழ்வுகளில் கலந்து கொள்ள உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்