››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

பாதுகாப்பு செயலாளர் “கொழும்பு சுப்பர்குரோஸ்-2017” நிகழ்வில் கலந்து சிறப்பிப்பு

பாதுகாப்பு செயலாளர் “கொழும்பு சுப்பர்குரோஸ்-2017” நிகழ்வில் கலந்து சிறப்பிப்பு

[2017/05/07]

இலங்கை கடற்படையின் மோட்டார் ஸ்போர்ட்ஸ் நிகழ்வான “கொழும்பு சுப்பர்குரோஸ்-2017” ஆரம்ப வைபவம் வெலிசர கடற்படை பந்தய ஓடுபாதையில் இன்று (மே, 07) இடம்பெற்றது. இந்நிகழ்வில் பாதுகாப்புச் செயலாளர் பொறியியலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி அவர்கள் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.

மேலும், இந்நிகழ்விற்கு வருகைதந்த பாதுகாப்பு செயலாளர் அவர்களை கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவிந்திர விஜேகுனரத்ன அவர்கள் வரவேற்றார்.

“கொழும்பு சுப்பர்குரோஸ்-2017” நிகழ்வு இலங்கை பந்தய சாரதிகள் மற்றும் ஓட்டுனர்கள் கூட்டுத்தாபனத்தின் ஒத்துழைப்புடன் இலங்கை கடற்படையினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்வு 12 மோட்டார் வண்டி மற்றும் 10 மோட்டார் சைக்கிள் என்ற பிரிவுகளின் அடிப்படையில் 125 பந்தய சாரதிகள் மற்றும் 85 பந்தய ஓட்டுனர்கள் பங்குகொண்டனர். மேலும், இப்பந்தய நிகழ்வில் கடற்படை விளையாட்டு வீரர்கள் பலர் பங்குகொண்டு வெற்றிபெற்றனர்.

மேலும், இலங்கை கடற்படையானது “கொழும்பு சுப்பர்குரோஸ்” நிகழ்வினூடாக திரட்டப் படும் நிதியினை கடற்படை யுத்த வீரர்களின் குடும்ப நலன்புரி உட்பட அவர்களின் பிள்ளைகளின் புலமைப்பரிசில்களுக்கும் பயன்படுத்தவுள்ளது.

இதேவேளை, வெற்றி பெற்ற வெற்றியாளர்களுக்கு வெற்றிச்சின்னங்கள் மற்றும் சான்றிதழ்களை பாதுகாப்பு செயலாளர் அவர்கள் வழங்கிவைத்தார்.

இந்நிகழ்வில் படைகளின் பிரதானி ரியர் அட்மிரல் சிரிமேவன் ரணசிங்க உட்பட சிரேஷ்ட கடற்படை அதிகாரிகள், இலங்கை பந்தய சாரதிகள் மற்றும் ஓட்டுனர்கள் கூட்டுத்தாபன அதிகாரிகள், பெரும் எண்ணிக்கையிலான கடற்படை வீரர்கள் மற்றும் பார்வையாளர்கள் உள்ளிட்டோர் வருகைதந்திருந்தனர்.

     செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்