››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

இலங்கை மற்றும் நெதர்லாந்து நாடுகளுக்கிடையிலான கடல் பாதுகாப்பு குழுக்களுக்கு வசதிகளை வழங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைசாத்து

இலங்கை மற்றும் நெதர்லாந்து நாடுகளுக்கிடையிலான கடல் பாதுகாப்பு குழுக்களுக்கு வசதிகளை வழங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைசாத்து

[2017/05/16]

அண்மையில் (மே, 16) பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்ற நிகழ்வின்போது இந்து சமுத்திரத்தின் ஊடாக பயணிக்கும் வணிகக் கப்பல்களுக்குப் பாதுகாப்பு வழங்குவது தொடர்பாக இலங்கை மற்றும் நெதர்லாந்து நாடுகளுக்கிடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.

குறித்த ஒப்பந்தத்தில் பாதுகாப்பு செயலாளர் பொறியியலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி மற்றும் இலங்கையின் நெதர்லாந்து நாட்டுக்கான தூதுவர் அதிமெதகு திரு ஜோனே டூநேவார்ட் ஆகியோர் கைச்சாத்திட்டனர்.

கடந்த ஆண்டில் கொழும்பில் இடம்பெற்ற காலி சர்வதேச கடல்சார் உரையாடல் கருத்தரங்கானது ரோயல் நெதர்லாந்து கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ராப் வர்கட் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க குறித்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட வழிவகுத்துள்ளதுடன் இந்து சமுத்திரத்தில் பயணிக்கும் நெதர்லாந்து கப்பல்களுக்கு பாதுகாப்பும் வழங்கப்படுகிறது.

அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் வழிகாட்டல்களுக்கு இணங்க கடல்சார் பாதுகாப்பினை கடற்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் இதனனூடாக அரசாங்கத்திற்கு பாரியளவிலான வருமானம் ஈட்ட முடிந்துள்ளது.



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்