››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

இந்திய- இலங்கைகடற்படையினர் இணைந்து மேற்கொண்ட நீரளவியல் கணக்கெடுப்பு வெற்றிகரமாக நிறைவு

இலங்கை பாதுகாப்பு கற்கைகள் நிலையத்தின் இணைய தாக்குதல் தொடர்பான விழிப்புணர்வு கலந்துரையாடல்

[2017/05/19]

இலங்கை பாதுகாப்பு கற்கைகள் நிலையத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட “இணைய பாதுகாப்பும் இலங்கையில் பரவிவரும் அச்சுறுத்தல்களும் ” எனும் தொனிப்பொருளில் அமைந்த பாதுகாப்பு கலந்துரயாடல் ஒன்று பாதுகாப்பு செயலாளர் பொறியியலாளர். கருணாசேன ஹெட்டியாராச்சி அவர்களின் தலைமையில் பாதுகாப்பு அமைச்சில் நேற்று மாலை (மே, 18) இடம்பெற்றது.

உலக நாடுகளில் அண்மைக்காலமாக அரச மற்றும் வர்த்தக துறைகளின் இணையத்தளங்கள் மற்றும் தகவல் தளங்களில் இடம்பெற்றுவரும் இணைய தாக்குதல் தொடர்பான விழிப்புணர்வினை ஏற்படுத்தும் வகையில் குறித்த கலந்துரையாடல் இடம்பெற்றது. இதில் நாட்டின் இணைய பாதுகாப்பு மற்றும் தகவல் தொழிநுட்ப துறைகளைச் சேர்ந்த நிபுணர்கள் கலந்துகொண்டனர்.

இந்த கலந்துரையாடலின் முக்கிய நோக்கம் தேசிய பாதுகாப்பு தொடர்பில் நாடு எதிர் நோக்கும் இணைய அச்சுறுத்தல்களில் இருந்து பாதுகாப்பு பெற்றுக்கொள்ளும் வகையில் உறுதியான பாதுகாப்பு கவசத்தினை அமைப்பதற்கான நிபுணர்களின் கருத்துக்களை பெற்றுக்கொள்வதும் அதற்கான பொறிமுறைகளை அமைத்துக் கொள்வதாகும்.

குறித்த இந்நிகழ்வில் பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் திரு. ஆர்.எம். சரத்குமார, கல்விமான்கள், இலங்கை பாதுகாப்பு கற்கைகள் நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் திரு. அபேகுனசேகர, சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள், அதிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

     செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்