››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

முல்லைத்தீவு பிரதேசத்தில் ஆடைத் தொழிற்சாலை பயிற்சி நிலையம் ஆரம்பித்து வைப்பு

முல்லைத்தீவு பிரதேசத்தில் ஆடைத் தொழிற்சாலை பயிற்சி நிலையம் ஆரம்பித்து வைப்பு

[2017/05/20]

முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் அலுவலகம் மற்றும் குளோபல் டிஸைன் டெக்ஸ் நிறுவனம் ஆகியன முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்துடன் இணைந்து முல்லைத்தீவு பிரதேசத்தில் உள்ள 35 வேலையற்ற இளைஞர் யுவதிகளுக்கான தையற்பயிற்சிகளை வழங்குவதற்கான முன்னெடுப்புகளை மேற்கொண்டுள்ளது.

குறித்த தையற்கலை பயிற்சிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டோருக்கான பயிற்சி நெறி மே மாதம் 18 ஆம் திகதி ஆரம்பமாகியது. இப்பயிற்சி காலப் பகுதியில் பயிற்சி பெறுவோருக்கு ரூ. 14000 கொடுப்பனவாக வழங்கப்படவுள்ளதுடன் உணவு மற்றும் போக்குவரத்து வசதிகளும் இலவசமாக வழங்கப்பவுள்ளது.

குறித்த இப்பயிற்சி ஆரம்ப நிகழ்வில் முல்லைத்தீவு பாதுகாப்பு படைக் கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் தம்பத் பெனாண்டோ, முல்லைத்தீவு மாவாட்ட செயலாளர் ரூபாவதி கேதிஸ்வரி, , மெரிடயிம்பற்று பிரதேச செயலாளர் குணபாலன் மற்றும் குளோபல் டிஸைன் டெக்ஸ் நிறுவனத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரி சம்பத் மதுரசிங்க ஆகியோர் கலந்து கொண்டனர்.



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்