››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

வருடாந்த தேசிய படைவீரர்கள் ஞாபகார்த்த தினம்

வருடாந்த தேசிய படைவீரர்கள் ஞாபகார்த்த தினம்

[2017/05/19]

வருடாந்த படைவீரர்கள் ஞாபகார்த்த நிகழ்வு தினம் முப்படைகளின் தளபதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் பாராளுமன்ற மைதானத்தில் அமைந்துள்ள படைவீரர் ஞாபகார்த்த நினைவு துாபி வளாகத்தினுள் (இன்று, 19) இடம்பெற்றது.

குறித்த நிகழ்விற்கு, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன, பாதுகாப்பு செயலாளர் பொறியியலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி மற்றும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சின் செயலாளர் திரு. ஏ ஜி பீ கித்சிறி ஆகியோர் வருகை தந்திருந்தனர்.

இதன்போது வருகை தந்த ஜனாதிபதி அவர்களை இராணுவ அணிவகுப்பு மரியாதைகளுடன் வரவேற்கப்பட்டபின்னர் உயிர்நீத்த படைவீரர்கள் ஞாபகார்த்த நினைவாக இரண்டு நிமிட மௌனஅஞ்சலியும் செலுத்தப்பட்டது. ரணவிருசேவா அதிகார சபையினால் ஒழுங்கு செய்யப்பட்ட இந்நிகழ்வில் வரவேற்புரை சபையின் தலைவி அனோமோ பொன்சேகா அவர்களால் நிகழ்த்தப்பட்டது. இதனிடையே மதத்தலைவர்களினால் சர்வமத ஆசீர்வாத நிகழ்வும் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் உரைநிகழ்த்திய அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் பயங்கரவாதிகளிடமிருந்து தாய்நாட்டை பாதுகாக்க தமது உயிர்கள் மற்றும் கால்களை இழந்த யுத்தவீர்ர்களை ஞாபகப்படுத்துவதன் முக்கியத்துவத்தினை எடுத்துரைத்தார்.

நாட்டின் அரசாங்கம் என்ற வகையில் இராணுத்தின் தரத்தினை புதிய தொழிநுட்ப அறிவு மற்றும் திறமைகளைக் கொண்டு மேம்படுத்தவுள்ளதாகவும் மேலும் அவர் இங்கு தெரிவித்தார். இதவேளை யுத்தவீர்ர்களுக்கு கடந்த காலங்களில் பல்வேறு சலுகைகள் மற்றும் கொடுப்பனவுகள் செய்துள்ளதாகவும், தற்பொழுது வீட்டுத்திட்டம் ஊடாக ஒவ்வொரு யுத்தவீர்ர்களுக்கும் ஒரு வீட்டினை வழங்கும் நோக்கில் செயற்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

இந்நிகழ்விற்கு மதத் தலைவர்கள், பீல்ட் மார்ஷல் சரத்பொன்சேகா, முப்படைகளின் பிரதானி, முப்படை தளபதிகள் மற்றும் பிரதி பொலிஸ் மாஅதிபர், அரச மற்றும் முப்படைகளின் உயரதிகாரிகள், விஷேட அதிதிகள் மற்றும் யுத்த வீரர்களின் குடும்பத்தினர் உள்ளிட்டோர் கலந்து சிறப்பித்தனர்.

     
     

மேலும் புகைப்படங்களை பார்வையிட >>செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்