››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

முப்படையினரைப் பலப்படுத்தும் செயற்பாடுகள் உரியவாறு நிறைவேற்றப்படும் – ஜனாதிபதி

முப்படையினரைப் பலப்படுத்தும் செயற்பாடுகள் உரியவாறு நிறைவேற்றப்படும் – ஜனாதிபதி

[2017/05/20]

விமர்சிப்பவர்கள் எதனைக் கூறினாலும் தேசிய பாதுகாப்பு தொடர்பான பொறுப்புக்களில் முப்படையிரைப் பலப்படுத்தும் செயற்பாடுகளை குறைவின்றி நிறைவேற்றுவதற்கு அரசாங்கம் அர்ப்பணிப்புடன் இருப்பதாக ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.

ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் இன்று (19) பிற்பகல் பாராளுமன்ற மைதானத்துக்கு அருகிலுள்ள படைவீரர் நினைவு தூபி வளாகத்தில் நடைபெற்ற 2017 தேசிய போர்வீரர் நினைவு நிகழ்வில் உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

30 ஆண்டுகளாக நடைபெற்ற போரில் மரணமடைந்த, மற்றும் அங்கவீனமுற்ற படையினருக்கான பொறுப்புக்கள் மற்றும் கடமைகளை குறைவின்றி நிறைவேற்றுவதுடன், நாட்டின் எதிர்காலத்துக்காக இப்போது பணியாற்றும் முப்படையினருக்கு புதிய தொழில்நுட்பத்துடன், உயர்தர சேவைக்காக தரமுயர்த்தும் பொறுப்பை நிறைவேற்றுவதாக இதன்போது ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.

கடந்த இரண்டரை ஆண்டுகளில் படையினரின் நலன்களுக்காக அரசாங்கம் பல புதிய திட்டங்களை அமுல்படுத்தியதை நினைவுகூர்ந்த ஜனாதிபதி அவர்கள், படையினருக்கு வீடுகளை வழங்கும் திட்டத்தை முறையாகவும் வினைத்திறனாகவும் மேற்கொண்டு அனைத்து படையினருக்கும் வீடுகளை வழங்கும் திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

தேசிய பாதுகாப்பு தொடர்பில் மட்டுமன்றி போதைப் பொருள் ஒழிப்பு உள்ளிட்ட தேசிய திட்டங்களிலும், அபிவிருத்தி திட்டங்களிலும், சமூக நலன்புரி செயற்பாடுகளிலும் படையினர் வழங்கும் பங்களிப்பினை ஜனாதிபதி பாராட்டினார்.

தாய்நாட்டுக்காக உயிர்த்தியாகம் செய்த படையினருக்கு மரியாதை செலுத்திய ஜனாதிபதி அவர்கள் படையினரின் நினைவு தூபிக்கு மலரஞ்சலி செய்தார்.

மதகுருமார்கள், மாகாண ஆளுனர்கள், மக்கள் பிரதிநிதிகள், ஜனாதிபதியின் செயலாளர், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட அரச அலுவலர்களும் முப்படைத் தளபதிகள் உள்ளிட்ட பாதுகாப்பு துறை அதிகாரிகளும் படை வீரர்களின் குடும்ப உறுப்பினர்களும் இந் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

நன்றி_ஜனாதிபதி செய்தி ஊடகம்



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்