››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

நிர்கதியான இலங்கை மீனவர்களுக்கு கடற்படையினர் உதவி

நிர்கதியான இலங்கை மீனவர்களுக்கு கடற்படையினர் உதவி

[2017/05/21]

சுமார் 72 கடல் மைல் தொலைவில் தென் பிராந்திய கடற் பரப்பிற்குள் பல நாள் மீன்பிடியில் ஈடுபடக்கூடிய மீன்பிடிப் படகொன்றில் நிர்கதியான நிலையில் தத்தளித்தித்துக் கொண்டிருந்த 6 காலி மீனவர்ககளுக்கான உதவிகளை இலங்கை கடற்படையினர் மேற்கொண்டனர். இம்மாதம் 7ம் திகதி குறித்த இம்மீனவர்கள் ஆழ்கடல் மீன்பிடியினை மேற்கொள்ளவதற்காக கடலுக்கு சென்றிருந்ததாகவும் அவர்களின் படகு கடந்த 17ம் திகதி இயந்திர கோளாறு காரணமாக பாதிக்கப்பட்டதாகவும் அன்றிலிருந்து அவர்கள் நிர்க்கதிக்கு ஆளாகியுள்ளதாவும் இலங்கை கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேற்படி மீனவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படையினருக்கு காலி மீன்பிடி துறைமுக அதிகாரிகளினால் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கு இணங்க இயந்திர கோளாறு காரணமாக ஆழ்கடலில் நிர்கதியான நிலையில் காணப்பட்ட மேற்படி மீன்பிடி படகின் அமைவிடத்திற்கு விரைந்த கடற்படையினர் மீன்பிடி பிடிப்படகினையும் மீனவர்களையும் பாதுப்பாக குறித்த மீன்பிடி துறைமுகத்திற்கு கொண்டுவந்து சேர்த்ததுடன் மேலதிக நடவடிக்கைகளுக்காக அவர்களை காலி மீன்பிடி துறைமுகத்தில் ஒப்படைத்தமை குறிப்பிடத்தக்கது.
 செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்