இந்திய கடற்படை கப்பல் கொழும்பு துறைமுகத்திற்கு வருகை
[2017/05/23]

இந்திய கடற்படைக்குச் சொந்தமான அதிநவீன ஆழ்கடல் ரோந்து
கப்பல் “ஐஎன்.எஸ் சுமேதா” மூன்று நாட்கள் விஜயம் மேற்கொண்டு அண்மையில் (மே,
20) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. வருகை தந்த குறித்த இக்கப்பலுக்கு
இலங்கை கடற்படையினரால் கடற்படை மரபுகளுக்கமைய வரவேற்பளிக்கப்பட்டது.
மேலும் இக்கப்பல் எதிர்வரும் 24ம் திகதி வரை இலங்கையில்
நங்கூரமிட்டு தரித்திருக்கவுள்ளது. இக் காலப்பகுதியில் குறித்த கப்பலில்
சிப்பந்திகள் இலங்கை கடற்படையினருடன் இணைந்து பல்வேறு கப்பல் பயிற்சிகள்
மற்றும் விளையாட்டு போட்டிகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளில்
பங்கேற்கவுள்ளனர்.
கடந்த ஆண்டில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 57
போர்கப்பல்களும் இவ்வாண்டின் கால்பகுதியில் சுமார் 20 போர்கப்பல்களும்
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருப்பது குறிப்பிடதக்கது. |