››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

சர்வதேச கடல்சார் பாதுகாப்பு கண்காட்சியை வெற்றிகரமாக நிறைவு செய்த சாகர மற்றும் நந்திமித்ர தாயகம் திரும்பியது.

சர்வதேச கடல்சார் பாதுகாப்பு கண்காட்சியை வெற்றிகரமாக நிறைவு செய்த சாகர மற்றும் நந்திமித்ர தாயகம் திரும்பியது.

[2017/05/26]

இலங்கை கடற்படையின் ஆழ்கடல் ரோந்துக் கப்பல்களான எஸ் எல் என் எஸ் சாகர மற்றும் எஸ் எல் என் எஸ் நந்திமித்ர நேற்று (மே, 25) தாயகம் திரும்பியது. குறித்த கப்பல்கள் சிங்கப்பூரில் நடைபெற்ற சர்வதேச கடல்சார் பாதுகாப்பு கண்காட்சியினை வெற்றிகரமாக நிறைவு செய்தபின்னர் தாயகம் திரும்பியதாக கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, இக்கண்காட்சியில் பங்குகொள்வதற்காக 34 கடற்படை அதிகாரிகள் உட்பட 324 கடற்படை வீரர்கள் கலந்துகொண்டதுடன், குறித்த கப்பல்கள் இம்மாதம் 12ம் திகதி முதல் 18ம் திகதி வரை தரித்துநின்றது. இதன்போது, இலங்கை கடற்படை வீரர்கள் யுத்தக்கப்பல்களின் காட்சிப்படுத்தல், சர்வதேச கடல்சார் பாதுகாப்பு மாநாடு, சர்வதேச கடற்படை பொறியியல் மாநாடு, கடற்படை வலையமைப்பு நிகழ்சிகள் போன்ற பல நிகழ்வுகளில் கலந்து கொண்டதுடன் சிங்கப்பூர் கடற்படை வீரர்களுடன் இணைந்து பல்வேறு கடற்படை பயிற்சிகளிலும் பங்குகொண்டனர்.

குறித்த நிகழ்வில் 20 நாடுகளை சேர்ந்த 29 கடற்படை கப்பல்கள் பங்குபற்றியமை குறிப்பிடத்தக்கது.செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்