››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

கடலோர பாதுகாப்பு படையினரால் கடல்சார் பாதுகாப்பு கருத்தரங்கு

கடலோர பாதுகாப்பு படையினரால் கடல்சார் பாதுகாப்பு கருத்தரங்கு

[2017/05/25]

அண்மையில் (மே, 24) இலங்கை கடலோர பாதுகாப்பு படையினரால் ஒழுங்குசெய்யப்பட்ட “பெரிய மற்றும் சிறிய அளவிலான கடல் கற்பாறைகள் மற்றும் கடல்சார் பாதுகாப்பு” எனும் கருப்பொருளிலான கருத்தரங்கு கொழும்பு கடற்படை கலங்கரை விடுதியில் இடம்பெற்றுள்ளதாக கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இரண்டாவது முறையாக நடைபெற்ற குறித்த மாநாடு இத்திட்டத்திற்கான அமைப்பாளர் திரு. கியாஸ் தீன் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க ஒழுங்குசெய்யப்பட்டுள்ளது.

2014 ஆம் ஆண்டில் முதன்முறையாக நடத்தப்பட்ட இக்கருத்தரங்கில் கலங்கரைக்கு அருகாமையுள்ள பெரிய மற்றும் சிறிய அளவிலான கடல் கற்பாறைகளை பாதுகாப்பதற்காகவும் அதற்கான மாற்று நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பாகவும் கூடிய கவனம்செலுத்தப்பட்டதுடன் இம்முறை நடைபெற்ற கருத்தரங்கில் நாட்டின் அனைத்து கடல்சார் பாதுகாப்பு தொடர்பாகவும் கவனம் செலுத்தப்பத்பட்டுள்ளது.

குறித்த இக்கருத்தரங்கில் வன பாதுகாப்பு திணைக்களம், இயற்கை பாதுகாப்பிற்கான சர்வதேச ஒருங்கிணைப்பு மையம், இலங்கை காவல் துறை மற்றும் பல நிறுவனங்களின் பேச்சாளர்கள் உரைநிகழ்த்தினர்

இந்நிகழ்வில் கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன அவர்கள் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்ததுடன், சிரேஷ்ட கடற்படை அதிகாரிகள், கல்வியியலாளர்கள் மற்றும் , விஷேட அழைப்பின் பேரில் வருகைதந்திருந்த பலரும் கலந்துகொண்டனர்.



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்