››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் மற்றும் நிவாரணம் வழங்கும் பணிகளில் முப்படையினர்

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் மற்றும் நிவாரணம் வழங்கும் பணிகளில் முப்படையினர்

[2017/05/26]

நாட்டில் பெய்து வரும் அடைமழையின் காரணமாக வீரகெட்டிய, நெலுவ, மொரவக்க, தியந்தர, பாதுக்க, புலத்சிங்கள,களவான, வெல்லம்பிட்டி, பளிந்தனுவர மற்றும் பெலியத்த ஆகிய பிரதேசங்களில் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் மீட்பு மற்றும் நிவாரணப்பணிகளில் முப்படைகளைச் சேர்ந்த படைவீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். குறித்த மீட்பு பணிகளில் 300 இராணுவ வீரர்களுடன் இணைந்து 13 கடற்படை குழுக்கள் மற்றும் விமானப்படை குழுக்கள் ஆகியன குறித்த மாவட்டங்களின் இடர்முகாமைத்துவ நிலையத்துடன் இணைந்து செயற்பட்டு வருவதாக இராணுவ தகவல்கள் தெரிவிக்கின்றன.

தொடர்ச்சியாகப் பெய்துவரும் அடைமழையினால் நாட்டின் பல பகுதிகளில் ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக உயிர் மற்றும் உடமைகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது. மேலும் இம்மழை வீழ்ச்சி காரணமாக களு கங்கை, களனி, நிள்வலா மற்றும் அத்தனகல ஓயா ஆகிய ஆறுகளின் நீர்மட்டங்கள் உயர்வடைந்துள்ளதாக் இடர்முகாமைத்துவ நிலையம் தெரிவிக்கின்றது. இன்று (மே,26) 12மணிவரையிலான காலப்பகுதியில் 2811 குடும்பகளைச் சேர்ந்த சுமார் 7856 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 25 மனித உயிர்கள் காவுகொள்ளப்பட்டுள்ளதுடன் 42பேர் காணாமல் போயுள்ளனர்.

தென் மேல் பருவக்காற்று ஆரம்பித்துள்ளதினால் நாடு முழுவதும் காற்று மற்றும் மலையுடன் கூடிய காலநிலை நிலவுவதாகவும் இக்காலநிலை எதிர்வரும் காலங்களில் தொடரும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவிக்கின்றது. மேலும் மேற்கு, தெற்கு, சப்ரகமுவ, மத்திய மற்றும் வட மத்திய மாகாணங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியங்கள் உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. மேலும் இப்பிரதேசங்களில் 150 மில்லி மீற்றர் அளவிலான மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவிக்கின்றது. கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிளிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியங்கள் காணப்படுவதாகவும் குறிப்பிடுகின்றது.

வங்காள விரிகுடா பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் காரணமாக நாட்டின் வட கிழக்குப் பிரதேசங்களில் மணிக்கு 80கிலோமீட்டருக்கும் அதிகமான வேகத்தில் காற்று வீசும் எனவும் காங்கேசன்துறையிலிருந்து திருகோணமலை ஊடான மட்டக்களப்பு வரையிலான கடல் உரமாக காணப்படும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிடுகின்றது.


அவசர அழைப்பு - இடர்முகாமைத்துவ நிலையம்

அவசர அழைப்புக்கு - 117

பொது       :  0 11 2136136

ஏனைய     :  0 11 2136222

               0 11 2670002

தொலை நகல்: 0 11 2670079

தொடர்பு இலக்கங்கள் - மாவட்ட செயலகம் மற்றும் மாவட்ட செயலாளர்கள்

இரத்தினபுரி மாவட்டம் - 0452222235 / 0714423760

களுத்துறை மாவட்டம் - 034 2222235 / 0716814813

காலி மாவட்டம் - 0912234235 / 0714415377

மாத்தறை மாவட்டம் - 0412222235 / 0776864397

ஹம்பாந்தோட்டை மாவட்டம் - 0472256235 / 0714441612

கொழும்பு மாவட்டம் - 0112369134 / 0773184910

கம்பஹா மாவட்டம் - 0332222235 / 0773273507

கேகாலை மாவட்டம் - 0352222235 / 0773633293செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்