››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

இராணுவம் தொடர்ந்தும் அனர்த்த மீட்பு பணிகளில்

இராணுவம் தொடர்ந்தும் அனர்த்த மீட்பு பணிகளில்

[2017/05/28]

இராணுவத்தினர் தொடர்ந்தும் அனர்த்த நிவாரணப்பணிகளை மேற்கொள்ளும் அதேவேளையில், பாரிய மண்சரிவு மற்றும் வெள்ளப் பெருக்கில் சிக்கிய பொது மக்களை மீட்பதற்காக மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையாகத்தைச் சேர்ந்த சுமார் 1600 இராணுவ வீரர்கள்  அண்மையில் (மே, 27) ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இராணுவத்தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த மீட்பு பணிகளை சிஸ்டர் செர்விஸ், காவல்துறை, அனர்த்த முகாமைத்துவ நிலையம், மாவட்ட மற்றும் பிரதேச செயலகத்தின் ஒருங்கிணைப்பின் ஊடாக மேற்கொள்ளப்படுகிறது.

இதேவேளை இராணுவ சுகாதார சேவையினூடாக வைத்திய அதிகாரிகள், தாதியர்கள், மருத்துவ உதவியாளர்கள் மற்றும் மருந்துகள் உட்பட ஆம்புலன்ஸ் வண்டிகளுடன் ஐந்து மருத்துவ குழுக்கள் மக்களுக்கு உதவும் வகையில் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும், இராணுவத்தினரால் கடந்த 24 மணிநேரத்துக்குள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட சுமார் 2600 நபர்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், கலாவண்ண மற்றும் பிடபெத்தர பகுதியில் சுமார் 3000 க்கும் அதிகமான சமைத்த உணவு விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும் கீழ்காணப்படும் தொலைபேசி இலக்கங்களுக்கு உங்களது அனர்த்த சேவையின் நிமித்தம் இராணுவம் இணைந்துள்ளது.

0766907206

0766907125

0112674535

0112674502

     



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்