››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

வெள்ள நிவாரண உதவி நிமித்தம் இரண்டாவது இந்திய கடற்படை கப்பல் “ஷர்துல்” வருகை

வெள்ள நிவாரண உதவி நிமித்தம் இரண்டாவது இந்திய கடற்படை கப்பல் “ஷர்துல்” வருகை

[2017/05/28]

நாட்டில் ஏற்பட்டுள்ள வெள்ள அனர்த்த நிவாரண உதவி நடவடிக்கைகளுக்கு உதவும் வகையில் இரண்டாவது இந்திய கடற்படை கப்பல் “ஷர்துல்” இன்று (மே, 28) கொழும்பு துறைமுகம் வந்துள்ளதாக கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றன. குறித்த கப்பல் கட்டளைத்தளபதி ரோஹித் மிஸ்ரா அவர்களால் கட்டளையிடப்பட்டுள்ளது.

மேலும், குறித்த கப்பலுடன் 4 சிறியரக படகுகள் மற்றும் 27 கடற்படை அதிகாரிகள் உட்பட 100 கடற்படை வீரர்கள், 3 வைத்தியர்கள், 6 மருத்துவ உதவியாளர்கள், 12 சுழியோடிகள் வீரர்கள் மற்றும் பல்வேறு மீட்புகுழுக்களும் வருகைதந்துள்ளதுடன், உலருணவு, குடிநீர் போத்தல்கள், தற்காலிக கூடாரம் மற்றும் மருந்து வகைகள் என்பன கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

நேற்று (மே, 27) வருகைதந்த இந்திய கடற்படை கப்பல் “கிர்ச்” தற்பொழுது களுத்துறை மாவட்ட உடுகம மற்றும் கலபத ஆகிய இடங்களில் இலங்கை கடற்படையினருடன் இணைந்து வெள்ள நிவாரண நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, மூன்றாவது இந்திய கடற்படை கப்பல் “ஜலஷ்வ” நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ள நாளை இலங்கை வர இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

     

கொஸ்கம தொடர்பான செய்திகள் >>>

வாக்வெள்ள பாலத்தில் குவிந்து காணப்படும் குப்பைகளை அகற்ற கடற்படையினர் உதவி

இராணுவம் தொடர்ந்தும் அனர்த்த மீட்பு பணிகளில

வெள்ள நிவாரண நடவடிக்கைகளுக்கு கடற்படையின் உதவி

நிவாரண உதவிகளுடன் இந்திய கடற்படை கப்பல் “கிரிச்” இலங்கை வருக

இராணுவம் ,கடற்படை மற்றும், விமானப்படை வீரர்கள் இணைந்து அனர்த்த பணிகளில் ஈடுபட்டுள்ளனர்

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் மற்றும் நிவாரணம் வழங்கும் பணிகளில்செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்