››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

வெள்ள அனர்த்த பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரணப்பணிகள் கடற்படையினரால் முன்னெடுப்பு

வெள்ள அனர்த்த பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரணப்பணிகள் கடற்படையினரால் முன்னெடுப்பு

[2017/05/30]

தென்மேற்கு பருவமழை காரணமாக முன்னொருபோதும் இல்லாத வெள்ள அனர்த்தம் ஏற்பட்டுள்ளதால் நாட்டின் 15 மாவட்டங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டன. இப்பகுதிகளிலிருந்து படிப்படியாக வெள்ளம் வடிந்துசெல்லும் இதேவேளையில், முப்படை வீரர்களின் அயராத உழைப்பின் காரணமாக மீட்பு மற்றும் நிவாரணப்பணிகளை தொடர்ந்தும் மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கை கடற்படையினர் இம்மாதம் 26ம் திகதியிலிருந்து தென் மற்றும் மேல் மாகாணங்களின் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப்பணிகளை முன்னெடுத்து வருகின்றனர். சுமார் 886 கடற்படை வீரர்கள் மற்றும் 113 கடற்படை படகுகளுடன் நிவாரணபாணிகள், தேடுதல் மற்றும் மீட்பு பணிகளுக்காக 113 குழுக்கள் கடந்த திங்கட்கிழமை முதல் இச்சேவைக்காக ஈடுபடுத்தப்பட்டுவருவதுடன், இவற்றில் 56 குழுக்கள் தென்பகுதியில் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். ஏனைய 57 குழுக்களும் மேல்மாகாணத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையிலும் செயற்பட்டுவருவதாகவும் கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்பிரகாரம் காலி மாவட்டத்தின் நெலுவ, இமாதுவ, வண்டுரம்ப, உடுகம, எல்பிட்டியா, அம்பலாங்கொட, பாப் போடலலா மற்றும் யக்கலமுல்ல, ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் ஹிக்கடுவ மற்றும் ரானா, மாத்தறை மாவட்டத்தின் கம்புறுபிட்டிய, மொரவகா, அக்குரஸ்ஸ, பிதிபதார மற்றும் டீயந்தரா. களுத்துறை மாவட்டத்தின் புலத்சிங்கள, பறகொட, பதுரலிய, கல்கேடிய, இலுக்போத்தான, மத்துகம, பெலனா மற்றும் வெலிபன்ன, ஆகிய இடங்களில் கடற்படையின் நிவாரண மீட்பு பணியாளர் குழுக்கள் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை கொழும்பு மாவட்டத்தில் வெல்லம்பிட்டிய, நவகமுவ, ஹன்வெல், அவிசாவல்லா, பாதுக்க, அம்படால, களனி, அங்கொட மற்றும் கடுவெல, நகர்ப்புரம் பிரதேச செயலகம், இரத்தினபுரி மாவட்டத்தின் களவன, நிவிதிகலா, எஹலியகொட, ஏலபத்த, சமாண்டேவலை, மரகஹ சந்தி, அயாகம, தால்டுவா, கிரிஎல்ல மற்றும் கம்பஹா மாவட்டத்தின் பியகம ஆகிய பகுதிகளில் வெள்ள அனர்த்த நிவாரண பணிகளை மேற்கொள்வதற்காக கடற்படை வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

குறித்த் பணிகளில் ஈடுபட்ட கடற்படை வீரர்களினால் இதுவரையில் பாதிக்கப்பட்ட நபர்கள் சுமார் 9262 பேர் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளதுடன், சுமார் 149,372 பொதி உணவும் இவர்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் கடற்படையின் வைத்திய குழுக்களினால் பாதிக்கப்பட்ட நூற்றுக்கும் அதிகமான மக்களுக்கு அடிப்படை மருத்துவ சிகிச்சைகளும் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, மாத்தறை பிடபெத்தரயிலுள்ள பாலத்தினூடாக செல்லும் நீரினை தடுக்கும் வகையில் குவிந்து காணப்பட்ட குப்பைகளை அகற்றும் பணிகளை கடற்படை வீரர்கள் மேற்கொண்டதுடன், வாக்வெள்ள பாலத்தில் குப்பைகள் நிறைந்து நீரோட்டம் தடைப்பட்டதையும் அகற்றும் பணியில் இவர்கள் ஈடுபட்டனர்.

மேலும், நாட்டில் நிலவிய வெள்ள அனர்த்தத்தின் காரணமாக 15 மாவட்டங்ககளிலுள்ள பிரதேசத்தின் சுமார் 151,392 குடும்பங்களில் 557,505 பேர் மிக மோசமான நிலையில் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரையில் 180 இறப்புகள் மற்றும் 109 பேர் காயங்களுக்கும் உள்ளாகியுள்ளதுடன் 640 வீடுகள் முற்றாகவும் 5,329 வீடுகள் பகுதியலவிலும் சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவிக்கிறது.

இதேவேளை, நேற்று (மே, 29) இந்திய கடற்படை கப்பல் “ஷர்துள்” இல் வருகைதந்த வைத்திய குழுக்கள் தற்பொழுது புலத்சிங்கள பகுதியிலுள்ள தியகடுவா விகாரையில் பாதிக்கப்பட்ட மக்களுக்க.

     
     

கொஸ்கம தொடர்பான செய்திகள் >>>

மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளில் தொடர்ந்தும் இலங்கை இராணுவத்தினர

வெள்ள நிவாரண உதவி நிமித்தம் இரண்டாவது இந்திய கடற்படை கப்பல் “ஷர்துல்” வருக

இலங்கை விமானப்படை வெள்ள அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி

வாக்வெள்ள பாலத்தில் குவிந்து காணப்படும் குப்பைகளை அகற்ற கடற்படையினர் உதவி

இராணுவம் தொடர்ந்தும் அனர்த்த மீட்பு பணிகளில

வெள்ள நிவாரண நடவடிக்கைகளுக்கு கடற்படையின் உதவி

நிவாரண உதவிகளுடன் இந்திய கடற்படை கப்பல் “கிரிச்” இலங்கை வருக

இராணுவம் ,கடற்படை மற்றும், விமானப்படை வீரர்கள் இணைந்து அனர்த்த பணிகளில் ஈடுபட்டுள்ளனர்

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் மற்றும் நிவாரணம் வழங்கும் பணிகளில்



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்