இராணுவத்தினரால் மேலும் வெள்ள நிவாரண உதவிகள்
[2017/05/30]

மாத்தறை நயிம்பல பிரதேசத்தில் நில்வலா கங்கை அணைக்கட்டின்
நீர்கசிவை தடுக்கும் வகையில் மண் மூட்டை இட்டு குறித்த அணைக்கட்டை
பலப்படுத்தி பாரிய அனர்த்தத்திலிருந்து மக்களை பாதுகாக்கும் வவகையில் 28ம்
திகதி மாலையிலிருந்து மறுநாள் காலைவரை இலங்கை இராணுவ வீரர்கள்
செயட்பட்டுள்ளதாக இராணுவத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு இறுதி
சடங்குகளுக்கான உதவிகளை காவல்துறையினர், வைத்திய அதிகாரிகள், அனர்த்த
முகாமைத்துவ நிலையம் மற்றும் தொடர்பான முகவர்கள் ஆகியோரின் ஒத்துளைப்புடன்
குறித்த இராணுவ வீரர்கள் மேற்கொண்டுவருகின்றனர்.
இதேவேளை சுமார் 1700 க்கும் அதிகாமான படை வீரர்கள்
அனர்த்த நிவாரண பணிகள் உட்பட மீட்பு பணிகள், வெளியேற்றுதல், மற்றும்
பாதிக்கப்பட்டவர்களை பாதுகாப்பான இடங்களில் அமர்த்துதல், வீதிகளின் தடைகளை
அகற்றி போக்குவரத்துக்கான வசதிகளை ஏற்படுத்தல், உணவு விநியோகித்தல்,
படகுகளில் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளல் மற்றும் காணமல் போனவர்களை தேடும்
பணிகளில் ஈடுபடல் போன்ற பல சேவைகளை செய்து வருகின்றனர்.
மேலும் இலங்கை இராணுவத்தின் வைத்திய
படைப்பிரிவைச்சர்ந்தவர்கள் களுத்துறை, புளத்சிங்கலா, பஹியங்கலா, கஹதுவ
மற்றும் காலி பிரதேசங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கான மருத்துவ சிகிச்சைகளை
வழங்கிவருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, 5 படைப்பிரிவைச் சேர்ந்த இலங்கை சிக்னல்
படையணியினால் நிவாரண நடவடிக்கையின்போது தொடர்புகளை இலகுவாகவும் விரைவாகவும்
மேற்கொள்ளும் வகையில் அவசர பரிமாற்ற வலையமைப்பு ஒன்றும்
உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறத
கொஸ்கம தொடர்பான
செய்திகள் >>>
|