››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

வெள்ள நிவாரணப்பணிகளில் அர்பணிப்புடன் செயல்படும் முப்படை மற்றும் பொலிசாருக்கு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பாராட்டு

வெள்ள நிவாரணப்பணிகளில் அர்பணிப்புடன் செயல்படும் முப்படை மற்றும் பொலிசாருக்கு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பாராட்டு

[2017/05/30]

நாட்டில் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரணப்பணிகளின்போது முப்படை மற்றும் போலீசாரினால் மேற்கொள்ளப்பட்ட அர்பணிப்பு மிக்க கடின உழைப்புடன் கூடிய பணிகளுக்கு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ. ருவன் விஜேவர்தன அவர்கள் தமது பாராட்டுக்களைத் தெரிவித்துக்கொண்டார். அண்மையில் காலி மற்றும் களுத்துறை மாவட்டங்களில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கான கண்காணிப்பு விஜயத்தினை பூர்த்தி செய்த பின்னரே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பாதிப்புக்குள்ளான மக்களின் வாழ்வாதாரத்தை இயல்பு நிலைக்கு கொண்டுவருவதற்காக இராணுவம், கடற்படை, விமானப்படை மற்றும் பொலிஸ் அதிகாரிகள் தங்கள் இரத்தம் மற்றும் வியர்வையினை சிந்தியுள்ளதாக குறிப்பிட்ட இராஜாங்க அமைச்சர், அனர்த்த நிலைமைகளின் போது முப்படை மற்றும் பொலிசாரினால் மேற்கொள்ளப்பட்ட மனிதாபிமான நடவடிக்கைகளையும் பாராட்டினார்.
மேலும் காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சர் கௌரவ. சாகல ரத்னாயக்க அவர்களுடன் இணைந்து நெலுவ பகுதிக்கு மேற்கொண்ட விஜயத்தின் போது அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டோருக்கு பாதுகாப்பு படையினரால் மேற்கொள்ளப்பட்டுவரும் நிவாரணப்பணிகளின் முன்னேற்றங்கள் குறித்தும் ஆராய்ந்தார்.

களுத்துறை மாவட்டத்தில் பெரிதும் பாதிக்கப்பட்ட புலத்சிங்கள பகுதிக்கு உள்நாட்டு அலுவல்கள், வடமேல் மாகாண அபிவிருத்தி மற்றும் கலாச்சார விவகாரங்களுக்கான அமைச்சர் கௌரவ. பாலித குமார தேவப்பெரும அவர்களுடன் விஜயம் செய்த இராஜாங்க அமைச்சர் அங்கு இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் நிவாரண நடவடிக்கைகள் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளையும் உடனடியாக மேற்கொள்ளுமாறு பணிப்புரை விடுத்தார்.

மேலும், இராஜாங்க அமைச்சர் விஜேவர்தன அவர்கள், சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி வள பிரதி அமைச்சர் கௌரவ. அஜித் பீ. பெரேரா அவர்களுடன் இணைந்து மில்லதெனிய பகுதிக்கு கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டார். அங்கு பிரதேச செயலக காரியாலயத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் பாதிக்கப்பட்டோருக்கு வழங்குவதற்காக ஒருதொகை அத்தியாவசியப் பொருட்களையும் இராஜாங்க அமைச்சர் கையளித்தமை குறிப்பிடத்தக்கது.

கொஸ்கம தொடர்பான செய்திகள் >>>

மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளில் தொடர்ந்தும் இலங்கை இராணுவத்தினர

வெள்ள நிவாரண உதவி நிமித்தம் இரண்டாவது இந்திய கடற்படை கப்பல் “ஷர்துல்” வருக

இலங்கை விமானப்படை வெள்ள அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி

வாக்வெள்ள பாலத்தில் குவிந்து காணப்படும் குப்பைகளை அகற்ற கடற்படையினர் உதவி

இராணுவம் தொடர்ந்தும் அனர்த்த மீட்பு பணிகளில

வெள்ள நிவாரண நடவடிக்கைகளுக்கு கடற்படையின் உதவி

நிவாரண உதவிகளுடன் இந்திய கடற்படை கப்பல் “கிரிச்” இலங்கை வருக

இராணுவம் ,கடற்படை மற்றும், விமானப்படை வீரர்கள் இணைந்து அனர்த்த பணிகளில் ஈடுபட்டுள்ளனர்

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் மற்றும் நிவாரணம் வழங்கும் பணிகளில்செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்