பாகிஸ்தான் கடற்படைக் கப்பல் “சுல்பிகார்” நிவாரணப் பொருட்களுடன்
கொழும்பு வருகை
[2017/05/31]

வெள்ளம் மற்றும் மண்சரிவு அனர்த்தங்களினால்
பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கிவைக்கும் நோக்கில்
பாகிஸ்தான் கடற்படைக் கப்பல் “சுல்பிகார்” நேற்று (மே, 30) கொழும்பு
துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாக கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த கப்பலின் கட்டளை தளபதி கெப்டன் பைசல் ஜாவீட்
உட்பட 3 மருத்துவ நிபுணர்கள் குழுக்களுடன் 46 கடற்படை அதிகாரிகள் மற்றும்
241 கடற்படை வீரர்களும் வருகை தந்துள்ளனர். இதன்போது நிவாரணப் பொருட்களாக
உலர் உணவுகள், மருந்து வகைகள் மற்றும் குடிநீர் போத்தல்கள் என்பன
இக்கப்பலில் கொண்டுவரப்பட்டுள்ளன.
மேலும், நாடுகளுக்கு இடையிலான உறவை மேலும் பலப்படுத்தும்
நோக்குடன் இலங்கைக்கு இரண்டாவது தடவையாக நிவாரணப் பொருட்களுடன் வருகைதந்த
குறித்த கப்பல் இம்மாதம் 4ம் திகதி நல்லென்ன விஜெஜமொன்ரை மேற்கொண்டு
கொழும்பு துறைமுகத்திற்கு வருகை தந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில், வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க,
இலங்கைக்கான பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர் அதிமேதகு வைத்திய கலாநிதி சர்ப்ராஸ்
அஹமத் கான் சிப்ரா, கடற்படையின் மேற்கு பிராந்திய கட்டளை தளபதி, கடற்படை
தலையமையக அதிகாரிகள் ஆகியோர் வருகைதந்திருந்தனர்.
கொஸ்கம தொடர்பான
செய்திகள் >>>
|