››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

அமைச்சில் பணிபுரியும் நபர்களுக்கு நிவாரண உதவி

அமைச்சில் பணிபுரியும் நபர்களுக்கு நிவாரண உதவி

[2017/06/01]

வெள்ளம் மற்றும் மண்சரிவு அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட பாதுகாப்பு அமைச்சில் பணிபுரியும் நபர்களுக்கு உதவும் வகையில் நிதி யுதவி உட்பட ஒரு தொகை நிவாரண பொருட்கள் அமைச்சிடம் கையளிக்கப்பட்டது. குறித்த நிகழ்வு ஜனாதிபதியின் மக்கள் தொடர்பு அதிகாரி திரு திலின வேவல்பணவ அவர்களின் தலைமையில் அமைச்சில் இன்று (ஜூன், 01) இடம்பெற்றது

இதன்பிரகாரம், அமைச்சில் பணிபுரியும் 55 நபர்களுக்கு சுமார் 4000 ரூபா பெறுமதியான நிதியுதவியுடன் நிவாரணப் பொருட்களாக உலர் உணவுகள், மருந்து வகைகள் மற்றும் குடிநீர் போத்தல்கள் என்பன கையளிக்கப்பட்டது.

இந்நிகழ்வின்போது குறித்த நிவாரண உதவியினை பாதுகாப்பு அமைச்சின் இராணுவ தொடர்புகளுக்கான அதிகாரி பிரிகேடியர் டீ ஏ அர் ரணவக்க அவர்களிடம் ஜனாதிபதியின் மக்கள் தொடர்பு அதிகாரி திரு. வேவல்பணவ, மேலதிக செயலாளர் திரு. சரத் குமார (பாதுகாப்பு), மேலதிக செயலாளர் திரு. டபிள்யு.ஏ.குலசூரிய (நிர்வாகம்), மேலதிக செயலாளர் (பாராளுமன்ற விவகாரம், கொள்கை மற்றும் திட்டமிடல்) திரு. ஆர்.பி.ஆர். ராஜபக்ஷ, மேலதிக செயலாளர் (தொழில்நுட்பம்) பொறியலாளர் எம்எச்எம்ஏ பண்டார மற்றும் ஜனாதிபதி ஒருங்கிணைப்பு செயலாளர் திரு. பாலிதா பெல்பொலா ஆகியோர் உத்தியோகபூர்வமாக ஒப்படைத்தனர்.

இந்நிகழ்வின்போது, திரு. வேவல்பணவ அவர்களிடம் நிதி அனுசரணை வழங்கிய லங்கா ஸ்பைஸ் (பிரைவேட்) லிமிடெட் நிறுவனம் சார்பாக வர்கைதந்த பிரதிநிதி காசோலையினை அடையாளபூர்வமாக வழங்கிவைத்தார்.

ஜனாதிபதியின் ஒருங்கிணைந்த அலுவலகம், இராணுவ தொடர்புகள் அலுவலகம் மற்றும் அமைச்சின் நிர்வாக அலுவலகம் ஆகியன இந்நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தன.

இந்நிகழ்வில் அமைச்சின் இராணுவ உயரதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்