››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டோருக்கு அவுஸ்திரேலிய அரசிடமிருந்து உதவிப்பொருட்கள்

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டோருக்கு அவுஸ்திரேலிய அரசிடமிருந்து உதவிப்பொருட்கள்

[2017/06/02]

வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கபட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நடவடிக்கைகளை மேலும் வினைத்திரனாக்கும் வகையில் அவுஸ்திரேலிய அரசாங்கத்தினால் அளிக்கப்பட்டுள்ள நிவாரணப் பொருட்களை ஏற்றிய விமானம் ஒன்று பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளதாக கடற்படைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவ்வாறு கிடைக்கப்பெற்ற நிவாரணப் பொதிகளை அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் பிரைஸ் ஹட்செஸ்ஸன் வெளிவிவகார அமைச்சர் கௌரவ ரவி கருணாநாயக்க அவர்களிடம் வைபவ ரீதியாக கையளித்தார். இவ்வாறு கையளிக்கப்பட்ட நிவாரணப் பொருட்களை பாதிக்கப்பட்ட மக்களுக்கு பகிர்தளிக்கும் வகையில் வெளிவிவகார அமைச்சர் கடற்படைத்தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன அவர்களிடம் கையளித்தார்.

அத்துடன், இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய இருதரப்பு உறவினை அதிகரிக்கும் வகையில் மேலும் சில நிவாரணப் பொருட்கள் நேற்றைய தினமும் அவுஸ்திரேலிய அரசினால் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

     செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்