››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

வெள்ள அனர்த்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இராணுவத்திடம் இருந்து பல்வேறு உதவிகள்

வெள்ள அனர்த்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இராணுவத்திடம் இருந்து பல்வேறு உதவிகள்

[2017/06/04]

வெள்ள அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட 15 மாவட்டங்களின் பல பகுதிகளில் நிவாரண பணியில் ஈடுபட்டுள்ள இலங்கை இராணுவத்தினர் பாதிக்கப்பட்ட மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவதற்கான பணிகள் பலவற்றில் துரிதமாக மேற்கொண்டுவருகின்றனர்.

கொழும்பு, கம்பஹா, காலி, மாத்தறை, களுத்துறை, கேகாலை, மற்றும் இரத்னபுரி ஆகிய மாவட்டங்களில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு தமது வீடுகளை இழந்த நிலையில் பாடசாலைகள், விகாரைகள், பள்ளிவாயல்கள், சமூக நிலையங்கள், தொழிற்சாலைகள், பொது சுகாதார நிலையங்கள் உள்ளிட்ட சுமார் 208 தற்காலிக நிவாரண நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கான பல்வேறு உதவிகளை இலங்கை இராணுவத்தினர், கடற்படை மற்றும் விமானப்படை உள்ளிட்ட நிவாரண நடவடிக்கைகளில் ஈடுபடும் ஏனைய குழுக்களுடன் இணைந்து மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், அவர்கள் உணவு, குடிநீர், மருத்துவ உதவிகள், சுத்தப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதுடன் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஏற்பட்டுள்ள சேதவிபரங்கள் கணக்கெடுப்புக்களையும் குப்பைகளை அகற்றும் நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வருகின்றனர்.

இதேவேளை, கடந்த வாரம் பெய்த மழைவீழ்ச்சி காரணாமாக களுத்துறை மாவட்டத்தில் பெரிதும் பாதிப்பட்ட பகியங்கள பிரதேசத்திற்கு இராணுவத்தளபதி லெப்டினன்ட் ஜெனரல் கிரிஷாந்த டி சில்வா அவர்கள் விஜயம் ஒன்றை மேற்கொண்டு அங்குள்ள நிலைகளை பார்வையிட்டமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன் இராணுவத்தின் சேவா வனிதா பிரிவு, வெள்ளத்தினால் பாதிக்கபட்ட முவகம, இரத்னபுரி, டெல்கொட மற்றும் கலவான மக்களுக்கு ஒரு மில்லியன் ரூபா பெறுமதியான நிவானப்பொருட்களின் ஒரு தொகுதியினை கையளித்தனர்.

     
     



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்