››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

நிவாரண உதவிக்கான காசோலை பாதுகாப்பு செயலாளரிடம் கையளிப்பு

நிவாரண உதவிக்கான காசோலை பாதுகாப்பு செயலாளரிடம் கையளிப்பு

[2017/06/06]

வெள்ளம் மற்றும் மண்சரிவு அனர்த்தங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் வரையறுக்கப்பட்ட இலங்கை ஸ்பைஸ் நிறுவனம் அமைச்சசின் நலன்புரி நிலையத்திற்கு இன்று (ஜூன், 06) நிதி உதவியினை வழங்கியுள்ளது.

குறித்த நிதி உதவிக்கான காசோலை அமைச்சில் இடம்பெற்ற நிகழ்வின்போது நிறுவனத்தின் விற்பனை தலைமை அதிகாரி இசுறு ரத்நாயக அவர்களினால் பாதுகாப்பு செயலாளர் பொறியியலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி அவர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

நிறுவனத்தின் அமெரிக்காவிலுள்ள ஆலோசகர்களான பேராசிரியர் பார்பரா ரஸ்கோ மற்றும் பேராசிரியர் க்ளேன் பிளெட்ஸே ஆகியோரினால் சுமார் 150, 000.00 ரூபா பெறுமதியான குறித்த நன்கொடை வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் ஏற்கனவே நிறுவனம் ஒன்றினால் இம்மாதம் முதலாம் திகதி சுமார் ரூபா 200,000.00 பெறுமதியான நன்கொடை வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்