››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

வடக்கில் இராணுவத்தினரால் பல்வேறு சமூக நலத்திட்டங்கள் முன்னெடுப்பு

வடக்கில் இராணுவத்தினரால் பல்வேறு சமூக நலத்திட்டங்கள் முன்னெடுப்பு

[2017/06/07]

வடக்கில் உள்ள இராணுவத்தினரால் அப்பகுதி மக்களுக்கு பல்வேறு சமூக நலன்புரி செயல்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதன்தொடர்ச்சியாக கிளிநொச்சி பாதுகாப்பு படை தலைமையக 66வது பிரிவின் விஜயபாகு காலாட்படையின் 15 இராணுவ வீரர்களினால் இப்பிரதேச பாடசாலை மாணவர்கள் சிலருக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

குறித்த நிகழ்வு புனேரி பரமன்கிரி அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் இடம்பெற்றது. இதன்போது சுமார் 44 மாணவர்களுக்கு சுமார் 175,000.00 ரூபா பெறுமதியான புத்தகங்கள் மற்றும் பாடசாலை பைகள் உட்பட கற்கை உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டன. படையினர் விடுத்த வேண்டுகோளுக்கமைய குறித்த நன்கொடைக்கான நிதியுதவியினை சொப்ட் லொஜிக் லைப் அமைப்பினர் வழங்கி வைத்தனர்.

இதேவேளை, யாழ்ப்பாண பாதுகாப்பு படை தலைமையகத்தின் 552 படைப்பிரிவின் கெமுனு வொச் படை வீரர்கள் 23 பேரின் நிதியுதவியுடன் தலா 500.00 ரூபா பெறுமதியான கற்றல் உபகரணங்கள் கச்செவேலி முன்பள்ளியின் 15 மாணவர்களுக்கு வழங்கிவைக்கப்பட்டது.
மேலும், யாழ்ப்பாண பாதுகாப்பு படை தலைமையகத்தின் 551 படைப்பிரிவின் இலேசாயுத காலாட்படையின் 18 வீரர்களால் பிரசித்திபெற்ற “சாக்கோட்டை” பகுதியில் சிரமதானப்பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. பருத்தித்துறையில் சுற்றுலா பயணிகளை கவரக்கூடிய குறித்த பகுதியானது இங்கு வருகை தந்த பயனிகளினால் விட்டுச்செல்லப்பட்ட குப்பைகளினால் மோசமான நிலையில் மாசடைந்து காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன் யாழ்ப்பாண பாதுகாப்பு படை தலைமையகத்தின் 553 படைப்பிரிவின் விஜயபாகு காலாட்படை 10 வீரர்களால் கலைமகள் முன் பள்ளி மற்றும் கிராம சேவை காரியாலயப்பகுதி என்பன சிரமதானம் செய்யப்பட்டது.

Donation at Paramankirei Government Tamil Mixed (GTM) School, Pooneryn

Ceremony at Kachchaweli pre-school

Shramadana campaignசெய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்