››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

கடற்படை வீரர்களினால் கால்வாய்களை சுத்திகரிக்கும் நடவடிக்கை முன்னெடுப்பு

கடற்படை வீரர்களினால் கால்வாய்களை சுத்திகரிக்கும் நடவடிக்கை முன்னெடுப்பு

[2017/06/08]

பருவ மழை காலங்களில் ஏற்படுகின்ற வெள்ள அனர்த்தங்களை தவிர்க்கும் வகையில் கொழும்பு புறநகர் பகுதியிலுள்ள பல்வேறு கால்வாய்களை சுத்திகரிக்கும் நடவடிக்கையினை இலங்கை கடற்படையினர் முன்னெடுத்துள்ளனர். இதன்பிரகாரம் கோட்டை மாநகர சபை பகுதியின் களனி மற்றும் பெத்தகான ஆகிய பகுதியிலுள்ள கால்வாய்களான டுளுகம சந்தி, பழைய கண்டி வீதி, வனாத்தமுள்ள, தளகபத, மீகஹவத்த, பெஹளியகோட, வனவசல புகையிரத நிலையம் மற்றும் துட்டகைமுணு மாவத்தை ஆகிய கால்வாய்கள் சுத்திகரிப்பதற்காக கடற்படையினர் உதவியதாக கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடற்படைத்தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன அவர்களின் வழிகாட்டல்களுக்கு அமைய கடற்படை வீரர்களினால் குறித்த சமூக நலன்புரி சேவையினை அண்மையில் (ஜூன், 01) முன்னெடுத்துள்ளனர்.

கடற்படை வீரர்களின் குறித்த பணிக்காக உள்ளூராட்சி சபை அதிகாரிகள், இலங்கை காணி மீட்டல் மற்றும் அபிவிருத்தி அதிகாரசபை ஆகியன உதவி வழங்கியுள்ளது.

     



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்