››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

தந்திரிமலை பூஜை நிகழ்வில் பாதுகாப்பு இராஜாங்க அமைசச்ர் பங்கேற்பு

தந்திரிமலை பூஜை நிகழ்வில் பாதுகாப்பு இராஜாங்க அமைசச்ர் பங்கேற்பு

[2017/06/09]

அனுராதபுரம் தந்திரிமலை விகாரையில் இடம்பெற்ற 14வது ஆலோக பூஜை நிகழ்வில் பாதுகாப்பு இராஜாங்க அமைசச்ர் கௌரவ. ருவன் விஜேவர்தன அவர்கள் நேற்று (ஜூன், 08) கலந்துகொண்டார்.

குறித்த நிகழ்வானது வருடாந்தம் பொசன் போயா தினத்தில் தந்திரிமலை புனித நகரத்தின் வரலாற்று முக்கியத்துவத்தினை வெளிப்படுத்தும் வகையில் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

இந்நிகழ்வின்போது உரை நிகழ்த்திய இராஜாங்க அமைச்சர், இலங்கைக்கு மிகச்சிறந்த பரிசான பௌத்தமதத்துடன் அரஹட் மகிந்த தேர அவர்களின் வருகையின் முக்கியத்துவத்தினை சுட்டிக்காட்டினார். மேலும், பௌத்த கலாச்சாரம் நாட்டின் கலைத்துறை, விவசாயத்துறை, மற்றும் கல்வித்துறை ஆகியவற்றின் அபிவிருத்திக்கு பெரிதும் உதவியுள்ளதாகவும், அரசாங்கம் பொத்த மதத்தினை பாதுகாப்பதில் முக்கிய கவனம் செலுத்துவதுடன் அதன் அபிவிருத்தியினையும் முன்னெடுத்துச் செல்லுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

மேலும், உட்கட்டமைப்பு மற்றும் பௌதீக அபிவிருத்தி என்பவற்றுடன் நாட்டின் ஆன்மீக வளர்ச்சியின் முக்கியத்துவம் பற்றியும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார். யுத்த காலங்களில் குறித்த விகாரையினை பாதுகாக்கும் வகையில் சேவையாற்றிய பௌத்த மதகுருக்களுக்கு தனது நன்றியை தெரிவித்ததோடு அண்மையில் வெள்ள அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்காக குறித்த பூஜைகளின்போது வேண்டுதல்களும் இடம்பெற்றன.

இந்நிகழ்வின்போது பக்தர்களுக்காக சங்கமித்ர தேரர் அவர்களின் உருவச்சிலையும் திரை நீக்கம் செய்துவைக்கப்பட்டது. குறித்த மத நிகழ்வுகளை விஜய பத்திரிக்கை நிறுவனம் மற்றும் லங்கா தீப பத்திரிக்கை நிறுவனம் ஆகியன ஏற்பாடு செய்திருந்தன.

இந்நிகழ்வில் தந்திருமலை ரஜமக விகாரையின் பிரதம விகாராதிபதி வணங்கற்குரிய மகா சங்க தந்திருமலை சந்தரதான தேரர், அமைச்சர்கள், விஜய பத்திரிக்கை நிறுவன தலைவர் உட்பட பெரும் எண்ணிக்கையிலான பக்தர்களும் கலந்துகொண்டனர்.

     
     செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்