››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

பியகம பொசன் வலயம் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரினால் திறந்து வைப்பு

பியகம பொசன் வலயம் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரினால் திறந்து வைப்பு

[2017/06/10]

பியகம பொசன் வலயம் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ. ருவன் விஜேவர்தன அவர்களினால் நேற்று மாலை (ஜுன், 09) திறந்து வைக்கப்பட்டது.

மேலும் குறித்த வலயத்தினை திறந்து வைத்த இராஜாங்க அமைச்சர், அழகிய பல வர்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட பியகம பொசன் வலயத்தினை சுற்றி பார்வையிட்டதுடன் அங்கு விஜயம் செய்யும் பக்தர்களுக்காக ஒழுங்கு செய்யப்பட்டிருந்த அன்னதான நிகழ்வினையும் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைத்தார்.

இந்நிகழ்வில் மகா சங்க நாயக்க உறுப்பினர்கள் மற்றும் பெருமளவிலான பக்தர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

குறித்த இந்நிகழ்விற்கு முன்னர் சப்புகஸ்கந்த மகா வித்தியாலயத்தில் மாணவ மாணவிகளினால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த பொசன் வலயத்தினையும் இராஜாங்க அமைச்சர் அங்குரார்ப்பணம் செய்து வைத்தமை குறிப்பிடத்தக்கது.செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்