››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

மிகிந்தல ‘ஆலோக பூஜா’ நிகழ்வில் பாதுகாப்பு இராஜாங்க அமைசச்ர் பங்கேற்பு

மிகிந்தல ‘ஆலோக பூஜா’ நிகழ்வில் பாதுகாப்பு இராஜாங்க அமைசச்ர் பங்கேற்பு

[2017/06/11]

மிகிந்தலை ரஜ மகா விகாரையில் நேற்று மாலை ( ஜுன், 10) இடம்பெற்ற 55வது ஆலோக பூஜா நிகழ்வில் பாதுகாப்பு இராஜாங்க அமைசச்ர் கௌரவ. ருவன் விஜேவர்தன அவர்கள் கலந்துகொண்டார். குறித்த இவ் விகாரையின் வரலாற்று முக்கியத்துவத்தினை வெளிப்படுத்தும் வகையில் இடம்பெற்ற இந்நிகழ்விற்கு லேக் ஹவுஸ் நிறுவனம் நிதி அனுசரணை வழங்கியது.

விகாரையின் அலங்கார விளக்குகள் யாவும் விமானப்படையின் நிபுணத்துவத்துடனும் இலங்கை மின்சார சபை மற்றும் லேக் ஹவுஸ் பத்திரிக்கை நிறுவனம் ஆகியவற்றின் நிதினுசரனையுடனும் அலங்கரிக்கப்பட்டிருந்தன.

குறித்த வைபவத்தின் சமய அனுஷ்டானங்கள் யாவும் இவ்விகாரையின் பிரதம விகாராதிபதி வணக்கத்துக்குரிய வாலஹஹேங்குனவெவே தம்மாரத்ன தேரரினால் நிகழ்த்தப்பட்டது.

இந்நிகழ்வில் உரை நிகழ்த்திய இராஜாங்க அமைச்சர் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக முப்படையினரால் முன்னெடுக்கப்பட்ட நிவாரண நடவடிக்கைகளை நினைவு கூர்ந்ததுடன் பௌத்தர்கள் மத்தியில் பொசன் போய தினம் கொண்டாடப்படுவதின் முக்கியத்துவம் பற்றியும் குறிப்பிட்டார்.

இந்நிகழ்வில் வணங்கற்குரிய மகா சங்க உறுப்பினர்கள், அமைச்சர்கள், விமானப்படை அதிகாரிகள் உட்பட பெரும் எண்ணிக்கையிலான பக்தர்களும் கலந்துகொண்டனர்.

     
     செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்