››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

கடற்படையினரின் வெளியேறும் நிகழ்வில் பாகிஸ்தான் கடற்படை தளபதி பங்கேற்பு

கடற்படையினரின் வெளியேறும் நிகழ்வில் பாகிஸ்தான் கடற்படை தளபதி பங்கேற்பு

[2017/06/12]

55வது கடட் உள்ளீர்ப்பு மற்றும் 01/2016 சேவை உள்ளீர்ப்பு அங்கத்துவத்தின் பிரகாரம் ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பல்கலைக்கழகத்தில் 30வது மற்றும் 31வது ஆட்சேர்ப்பில் தொழில்நுட்பம் மற்றும் தகவல் ஆகிய துறைகளில் கற்கை நெறியினை பூர்த்தி செய்து வெளியேறும் நிகழ்வு திருகோணமலை கடற்படை மற்றும் கடல்சார் கல்விநிலையத்தின் அணிவகுப்பு மைதானத்தில் இன்று (ஜூன், 11) இடம்பெற்றது. இந்நிகழ்வில் கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவிந்திர விஜேகுனரத்ன அவர்களின் அழைப்பின்பேரில் பாகிஸ்தான் கடற்படை தளபதி அட்மிரல் மொஹமட் சகாவுல்லாஹ் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.

சகாவுல்லாஹ் அவர்கள், கடற்படை தளபதியின் தலைமைச் செயலாளர், கொமடோ ஜாவித் இக்பால் மற்றும் பாகிஸ்தான் கடற்படை கல்வியகத்தின் கொமடான் கொமடோ அத்னான் அஹமத் ஆகியோருடன் இம்மாதம் 10ம் திகதி இலங்கைக்கான உத்தியோக பூர்வ வியஜமொன்ரை மேற்கொண்டதாக கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கைக்கு வருகைதந்த பாகிஸ்தான் கடற்படை தளபதி அவர்களால் கடற்படையினரின் வசதிகருதி திருகோனமலை கடற்படை மற்றும் கடல்சார் கல்வியகத்தில் படகோட்டும் கழகம் ஒன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. திருகோணமலை ஈச்சந்தீவு பகுதியில் 1986 ஆண்டு பயங்கரவாதிகள் பதுங்கி இருந்த இடங்களை தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டுகொண்டிருந்த வேளையில் தனதுயிரை தியாகம் செய்த கொமாண்டர் பஹார் அவர்களின் நினைவாக குறித்த கழகம் ஸ்தாபிக்கப்பட்டது.

இதேவேளை, பாகிஸ்தான் கடற்படை தளபதி அவர்கள் கண்டியிலுள்ள தலதா மாளிகை மற்றும் நூதன சாலை என்பவற்றுக்கும் விஜயம் மேற்கொண்டுள்ளார்.

1975ம் ஆண்டு பாகிஸ்தான் கடற்படையில் இணைந்துகொண்ட இவர் 1978ம் ஆண்டு ஆணை அதிகாரமளிக்கப்பட்ட அதிகாரியாக செயல்பாட்டு பிரிவில் நியமிக்கப்பட்டார். அத்துடன், 2014 ஆம் ஆண்டு அவர் பாகிஸ்தான் கடற்படை தலைமை அலுவலகத்தில் கடற்படை தளபதியாக பொறுப்பேற்றமை குறிப்பிடத்தக்கது.

     
     



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்