››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

பிரான்ஸ் கடற்படை கூட்டுப்படையின் கட்டளை அதிகாரி, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சருடன் சந்திப்பு

பிரான்ஸ் கடற்படை கூட்டுப்படையின் கட்டளை அதிகாரி, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சருடன் சந்திப்பு

[2017/06/20]

150வது பிரான்ஸ் கடற்படை கூட்டுப்படையின் கட்டளை அதிகாரி ரியல் எட்மிரல் ஒலிவியர் லெபாஸ் அவர்கள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ ருவன் விஜேவர்தன அவர்களை அமைச்சில் இன்று (ஜூன், 20) சந்தித்துள்ளார்.

இச்சந்திப்பின் போது பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் மற்றும் பிரான்ஸ் கடற்படை கூட்டுப்படையின் கட்டளை அதிகாரி ஆகியோருக்கிடையில் சுமூகமான கலந்துரையாடல்கள் இடம்பெற்றதுடன், இந் நிகழ்வை நினைவு கூறும் வகையில் இருவருக்குமிடையில் நினைவுச் சின்னங்களும் பரிமாரிக் கொள்ளப்பட்டன.

இதன் போது இலங்கைக்கான பிரான்ஸ் நாட்டு தூதுவர் அதிமேதகு திரு. ஜீன் மாரின் ஸ்சுஹ் அவர்களும் வருகைதந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை பிரான்ஸ் கடற்படையின் “மிஸ்டல்” மற்றும் “கோபட்” ஆகிய இரு கப்பல்கள் நல்லெண்ண விஜமொன்றை மேற்கொண்டு இன்று காலை (ஜூன், 20) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தன. மேலும், இக்கப்பல்கள் எதிர்வரும் 26ம் திகதிவரை இங்கு தரித்திருக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தரித்திருக்கும் மிஸ்டல் கப்பலில் 56 அதிகாரிகள் உட்பட 431 கடற்படை வீர்ர்களும் கோபட் கப்பலில் 18 அதிகாரிகள் உட்பட 157 கடற்படை வீர்ர்களும் வருகை தந்துள்ளனர்.



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்