››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

மட்டக்களப்பு மாவட்டம் கண்ணிவெடியற்ற மாவட்டமாக பிரகடனம்

மட்டக்களப்பு மாவட்டம் கண்ணிவெடியற்ற மாவட்டமாக பிரகடனம்

[2017/06/22]

கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டு அபாய சமிஞ்சை விடுக்கப்பட்டிருந்த மட்டக்களப்பு மாவட்டத்தை கண்ணிவெடியற்ற மாவட்டமாக கண்ணிவெடியகற்றும் பிரிவினரால் பிரகடனப் படுத்தப்படும் நிகழ்வு நேற்று (ஜுன்,21) மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றதாக இராணுவ தகவல்கள் தெரிவிக்கின்றன.

இம்மாவட்டத்தில் புதைப்பட்டிருந்த கண்ணிவெடிகள் பலவற்றை அகற்றும் பணிகளில் இலங்கை இராணுவத்தின் கண்ணிவெடியகற்றும் பிரிவினருடன் இணைந்து உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அரச சார்பற்ற நிறுவனங்கள் பலவும் ஈடுபட்டிருந்தன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் சுமார் 377,026,951 சதுர மீட்டர்கள் பரப்பில் கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டிருப்பதாக இனங்காணப்பட்டது. இவற்றில் 83%ஆன பகுதிகளில் இலங்கை இராணுவத்தின் கன்னிவெடியகற்றும் பிரிவு கண்ணிவெடிகளை செயலிழக்கச் செய்தது. மீதமுள்ள 17% பகுதிகளில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அரச சார்பற்ற நிறுவனங்கள் இணைந்து கண்ணிவெடிகளை அகற்றியது.

இலங்கை இராணுவத்தின் கன்னிவெடியகற்றும் பிரிவானது கண்ணிவெடியகற்றும் நடவடிக்கைகளில் ஈடுபடும் நிறுவனங்களில் முதற் தர நிறுவனமாகும். இது சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் மற்றும் இந்து சமய விவகாரங்கள் அமைச்சின் கீழ் தமது பணிகளை செவ்வனே ஆற்றி வருகிறது. இலங்கை இராணுவத்தின் கண்ணிவெடியகற்றும் பிரிவில் சுமார் 450 இராணுவத்தினர் சர்வதேச ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட இயல்பு முறைமை, இயந்திர முறைமை, மற்றும் மோப்ப நாய்களைப் பயன்படுத்தல் போன்ற வழிமுறைகளைப் பின்பற்றி கண்ணிவெடியகற்றும் நடவடிக்கைகளில் ஈட்பட்டுவருகின்றனர்.

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற குறித்த இந்நிகழ்வில் இராணுவ அதிகாரிகள் , உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அரச சார்பற்ற நிறுவனங்களின் அதிகாரிகள் இணைந்து இம்மாவட்டத்தை கண்ணிவெடிகளற்ற மாவட்டமாக பிரகடனப்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் அமைச்சர்களான கௌரவ. சுவாமிநாதன், கௌரவ. ஹிஸ்புள்ளா, இலங்கைக்கான அமெரிக்க தூதுவர், பிரித்தானிய உயர்ஸ்தானிகர், கனேடிய, ஜப்பான் மற்றும் அவுஸ்திரேலிய பிரதிநிதிகள், கிழக்கு மாகாண முதலமைச்சர், அமைச்சுக்களின் செயலாளர்கள், மாவட்ட செயலாளர், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

     


 



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்