››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

தாய்லாந்தில் இராணுவ விளையாட்டு வீர வீராங்கனைகள் சாதனை

தாய்லாந்தில் இராணுவ விளையாட்டு வீர வீராங்கனைகள் சாதனை

[2017/06/23]

இலங்கை இராணுவ விளையாட்டு வீர வீராங்கனைகள் பெங்கொக் நகரில் இடம்பெற்ற “2017ஆம் ஆண்டிற்கான தாய்லாந்து ஓபன் டிராக் மற்றும் பீல்ட் சாம்பியன்ஷிப்” போட்டியில் கலந்துகொண்டு பல நாடுகளை தோற்கடித்து 400மீட்டார் போட்டியில் தங்கப்பதக்கம் உட்பட மேலும் பல பதக்கங்களை வெற்றி கொண்டுள்ளதாக இராணுவத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கை சார்பாக கலந்துகொண்ட குறித்த இராணுவ அணியினர் தமது திறமைகளை வெளிக்காட்டி, தென் கொரியா, மலேசியா, தாய்லாந்து, மியான்மார், வியட்நாம், தைபே மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளுடன் போட்டியிட்டு வெற்றி பெற்றதன் காரணமாக நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளனர்.

இதன் பிரகாரம் தனி நிகழ்சிகளில் போட்டியிட்டு இலங்கை மின்சாரம் மற்றும் பொறியியலாளர் படைபிரிவை சேர்ந்த கோப்ரல் எச்.கே.கே குமாரகே 400மீட்டார் போட்டியில் ஒரு தங்கப்பதக்கத்தினையும், அதே படைப்பிரிவை சேர்ந்த கோப்ரல் ஆர்.ஏ.கே கருணாதிலக இரண்டுநாட்கள் தொடர்ச்சியாக இடம்பெற்ற தடகள போட்டியில் வெள்ளிப் பதக்கத்தையும் இராணுவ மகளீர் படையணியைச் சேர்ந்த இரண்டு வீராங்கனைகளான யூ.கே.என். இரத்னாயக மற்றும் எச்.டீ.டீ லக்ஷானி ஆகியோர் முறையே 3000 மீற்றர் தடை தாண்டல் மற்றும் முப்பாச்சல் போட்டிகளில் வெள்ளிப் பதக்கத்தையும் பெற்றுக்கொண்டனர்.



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்