››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

இரண்டாவது இலங்கை – ஜப்பான் கடல்சார் பாதுகாப்பு தொடர்பான கலந்துரையாடல்

இரண்டாவது இலங்கை – ஜப்பான் கடல்சார் பாதுகாப்பு தொடர்பான கலந்துரையாடல்

[2017/06/27]

கடல்சார் பாதுகாப்பு மற்றும் ஓசியானிக் பிரச்சினைகள் தொடர்பான இரண்டாவது இலங்கை – ஜப்பான் கலந்துரையாடல் பாதுகாப்பு அமைச்சில் இன்று (ஜூன், 27) இடம்பெற்றது.

குறித்த நிகழ்வில் பாதுகாப்பு அமைச்சின் தற்காலிக செயலாளர் திரு. ஆர் பி ஆர் ராஜபக்ஸ அவர்கள் இலங்கை பிரதிநிதிகள் குழுவினருக்கும், தென்மேற்கு ஆசியா பிரிவின் பணிப்பாளர் திரு தகாஷி அறியோஷி அவர்கள் ஜப்பான் பிரதிநிதிகள் குழுவினருக்கும் தலைமை வகித்தனர்.

இச்சந்திப்பின் போது இரு நாடுகளுக்கிடையிலான இரு தரப்பு கடல்சார் உறவுகள் தொடர்பாகவும் , கடல்சார் பாதுகாப்பு பிரச்சினைகள் மற்றும் அதன் வழிமுறைகளை கண்டறிந்து அவற்றிற்கு முக்கியத்துவம் கொடுப்பதன் மூலம் பிராந்திய கடல்சார் பாதுகாப்பினை உறுதிப்படுத்தல் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

மேலும், குறித்த தொனிப்பொருளில் கலந்துரையாடப்பட்ட விடயங்கள் தொடர்பாக இரு நாடுகளும் பரஸ்பர புரிந்துணர்வினை வெளிக்காட்டினர்.

இக்கலந்துரையாடலில், மேலதிக செயலாளர் (பாதுகாப்பு) திரு. ஆர் எம் எஸ் சரத்குமார, பாதுகாப்பு அமைச்சின் அதிகாரிகள் உட்பட ஜப்பானிய பிரதிநிதிகள் குழுவினர், கடலோர பாதுகாப்பு படை, இலங்கை சார்பாக வெளிவிவகார அமைச்சு, பாதுகாப்பு அமைச்சு,

இராணுவப்படை, கடற்படை, விமானப்படை, கடலோர பாதுகாப்பு படை, துறைமுக அதிகாரசபை ஆகியவற்றின் பிரதிநிதிகள் குழுவினர் கலந்துகொண்டனர்.

இந் நிகழ்வை நினைவு கூறும் வகையில் ஜப்பானிய தூதுக்குழுவினருக்கு நினைவுச் சின்னங்களும் வழங்கிவைக்கப்பட்டன.

     செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்