››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

பாதுகாப்பு படைகளின் பிரதாணிக்கு முப்படைகளின் மரியாதை

பாதுகாப்பு படைகளின் பிரதாணிக்கு முப்படைகளின் மரியாதை

[2017/06/29]

புதிதாக நியமனம் பெற்ற பாதுகாப்பு படைகளின் பிரதாணி ஜெனரல் கிரிஷாந்த டி சில்வா ஆர்டபள்யூபீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்களுக்கு முப்படைகளின் மரியாதை வழங்கும் நிகழ்வு இன்று (ஜூன், 29) இடம்பெற்றது. இதன்போது 5வது பாதுகாப்பு படைகளின் பிரதாணியாக தனது கடமையை பொறுப்பேற்றுள்ளார்.

இந்நிகழ்வின்போது முப்படைகளின் சிரேஷ்ட அதிகாரிகள் வருகை தந்திருந்தனர்.

1980 பெப்ரவரி 6ம் திகதி இலங்கை இராணுவத்தில் இணைந்து கொண்ட இவர் இலங்கை பொறியாளர்கள் படைபிரிவில் இரண்டாம் நிலை லெப்டினன்ட் அதிகாரம் பெற்ற அதிகாரியாக 1981 ஜூலை 18ம் திகதி நியமனம் பெற்றார். மேலும், லெப்டின் ஜெனரல் பதவி உயர்வுபெற்று 21வது இலங்கை இராணுவ தளபதியாக 2015 பெப்ரவரி 22ம் திகதி தனது கடமையை பொறுப்பேற்றதுடன், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் பணிப்புரைக்கு அமைய இவ்வருடம் ஜூன் 27ம் திகதி செயற்படும் வகையில் ஜெனரல் தரத்திற்கு தரமுயர்த்தப்பட்டுள்மை குறிப்பிடத்தக்கது.

     
     செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்