››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

கோட்டேயில் நீர் தேங்கி காணப்பட்ட பிரதேசங்கள் கடற்படையினரால் சுத்தம்

கோட்டேயில் நீர் தேங்கி காணப்பட்ட பிரதேசங்கள் கடற்படையினரால் சுத்தம்

[2017/06/30]

கோட்டே,பெத்தகான கால்பந்தாட்ட மைதானம் அருகில் சாக்கடைச்சேறு, குப்பைகள் மற்றும் கழிவுநீர் ஆகியன சேர்ந்து அடைப்புக்குள்ளாகி கால்வாய்களினூடாக நீர் செல்ல முடியாத நிலையில் காணப்பட்ட நீரேந்து பிரதேசங்களை சுத்தப்படுத்தும் நடவடிக்கைகளில் இலங்கை கடற்படை வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டதாக கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த கால்வாய்கள் நீர் செல்ல முடியாத வகையில் அடைப்புக்குள்ளாகி காணப்பட்ட நிலையை அறிந்த கடற்படையின் உயர் அதிகாரிகள் கடற்படையின் 50 வீரர்களை குறித்த பகுதியை தூய்மைப் படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தினர்.

தற்போது நிலவும் மழையுடன் கூடிய காலநிலை காரணமாக ஏற்படும் அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் வகையில் குறித்த செயற்றிட்டம் கடற்படையினரால் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்