››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

கம்பஹா மாவட்ட சுகாதார மற்றும் சுற்றாடல் மாநாட்டில் பாதுகாப்பு இராஜங்க அமைச்சர் பங்கேற்பு

கம்பஹா மாவட்ட சுகாதார மற்றும் சுற்றாடல் மாநாட்டில் பாதுகாப்பு இராஜங்க அமைச்சர் பங்கேற்பு

[2017/07/02]

கௌரவ ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் கம்பஹா மாவட்ட சுகாதார மற்றும் சுற்றாடல் மாநாடு கம்பஹா ஸ்ரீ போதி மைதானத்தில் நேற்று (ஜூன், 30) இடம்பெற்றுள்ளது.

இந்நிகழ்விற்கு பாதுகாப்பு இராஜங்க அமைச்சர் கௌரவ ருவன் விஜேவர்தன அவர்களும் வருகை தந்திருந்தார்.

இந்நிகழ்வில் உரை நிகழ்த்திய ஜனாதிபதி கௌரவ மைத்திரிபால சிறிசேன அவர்கள் கழிவு முகாமைத்துவம் மற்றும் டெங்கு ஒழிப்பு தொடர்பாக தற்போது நாட்டில் நடைமுறைப்படுத்தப்படும் நிகழ்ச்சித் திட்டங்களை முறைப்படுத்தி வினைத்திறன்மிக்க வகையில் அவற்றை முன்னெடுக்க வேண்டியதன் அவசியம் குறித்து வலியுறுத்தினார்.

மேலும், இப்பிரச்சினை அரசாங்கத்தின் அல்லது சில குறிப்பிட்ட அரசியல் கட்சிகளின் பிரச்சினையல்ல என்பதாகவும், இதனை நாட்டு மக்கள் அனைவருடைய வாழ்க்கைப் பிரச்சினையாகக் கருதி இது தொடர்பில் அனைவரும் அதிக கவனத்துடன் செயற்பட வேண்டியதன் அவசியத்தையும், இது தொடர்பாக பொதுமக்கள் மிகுந்த கவனத்துடன் செயற்பட வேண்டும் எனவும் ஜனாதிபதி மேலும் சுட்டிக்காட்டினார்.

இந்நிகழ்வின்போது டெங்கு நோயைக் கட்டுப்படுத்துவது தொடர்பாகவும், பாடசாலைகளில் சுற்றாடல் பாதுகாப்பு நிகழ்ச்சித் திட்டங்களை நடைமுறைப்படுத்துவது தொடர்பாகவும் விசேட உரை நிகழ்த்தப்பட்டது. மேலும், இங்கு கழிவு முகாமைத்துவம் தொடர்பாக பாடசாலை மாணவர்களினால் மேடை நாடகம் ஒன்றும் அரங்கேற்றப்பட்டது.

இந்நிகழ்வில், முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, அமைச்சர்கள் மேல் மாகாண ஆளுநர், முதலமைச்சர், அரச அதிகாரிகள், சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள், ஊர்மக்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

     
     



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்