››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

யாழில் 54 ஏக்கர் மக்களுடைய நிலம் இராணுவத்தினரால் விடுவிப்பு

யாழில் 54 ஏக்கர் மக்களுடைய நிலம் இராணுவத்தினரால் விடுவிப்பு

[2017/07/03]

யாழ். பலாலி இராணுவ முகாமிற்கு அன்மித்த தைடிடி கிராமசேவகர் பிரிவிற்குட்பட்ட மயிலிட்டி துறைமுகம் மற்றும் அதனை அண்டிய பிரிவில் 54 ஏக்கர் மக்களுடைய நிலம் இன்று (ஜூலை, 03) விடுவிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பொதுமக்கள் மற்றும் யாழ் மாவட்ட அரசியல் வாதிகள் விடுத்த வேண்டுகோளை கருத்திற்கொண்டு யாழ். பாதுகாப்பு படைத் தலைமையகத்தினால் குறித்த நிலப்பரப்பு விடுவிக்கப்பட்டுள்ளது. இதன்பிரகாரம் சுமார் 30 வருடங்கள் உள்நாட்டில் இடம்பெயர்த்து வாழும் இப்பிரதேசத்தை சேர்ந்த 187 குடும்பங்கள் மீண்டும் தமது சொந்த இடங்களில் குடியேறி தமது வாழ்வாதாரமான மீன்பிடி நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த காணிகள் கையளிக்கும் நிகழ்வினை தேசிய ஒருங்கிணைப்பு மற்றும் நல்லிணக்க அமைச்சு, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் மற்றும் இந்து சமய விவகாரங்கள் அமைச்சு, யாழ் மாவட்ட செயலாளர் மற்றும் யாழ். பாதுகாப்பு படைத் தலைமையகம் ஆகியன இணைந்து ஏற்பாடு செய்திருந்தன.

மேலும், பாதுகாப்பு அமைச்சு, முப்படை தளபதிகள், உரிய அமைச்சு மற்றும் யாழ். மாவட்ட செயலாளர் ஆகியோருடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்பு குறித்த காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன.

இந்நிகழ்வில், பாராளுமன்ற உறுப்பினர்கள், யாழ். மாவட்ட செயலாளர், யாழ். பாதுகாப்பு படைத் தளபதி, இராணுவ அதிகாரிகள், மற்றும் காணி உரிமையாளர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

     செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்