››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

புதிய இராணுவ தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனநாயக்க நியமிப்பு

புதிய இராணுவ தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனநாயக்க நியமிப்பு

[2017/07/04]

மேஜர் ஜெனரல் மகேஷ் சேனநாயக்க ஆர்டப்பி ஆர்எஸ்பி யுஎஸ்பி பிஎஸ்சி அவர்கள் இலங்கை இராணுவத்தின் புதிய தளபதியாக இலங்கை ஜனநாய சோஷலிச குடியரசின் ஜனாதிபதியும் முப்படைகளின் தளபதியுமான அதிமேதகு மைத்திரிபால சிறிசேன அவர்களினால் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் லெப்டினன்ட் ஜெனரலாக தரமுயர்த்தப்பட்ட பின்னர் இன்றையதினம் (ஜுலை, 04) இலங்கை இராணுவத்தின் 22வது தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளதாக இராணுவ தகவல்கள் தெரிவிக்கின்றன.

இராணுவ தளபதியாக பதவி வகித்த ஜெனரல் கிரிசாந்த டி சில்வா அவர்கள் கூட்டுப்படைகளின் பிரதானியாக நியமனம் பெற்றுச்சென்ற பின்னர் நிலவிய இராணுவ தளபதி வெற்றிடத்தினை பூர்த்திசெய்யும் வகையில் குறித்த இந்நியமனம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்