››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

விஷேட டெங்கு ஒழிப்பு வாரத்தில் இராணுவத்தினர் இணைவு

விஷேட டெங்கு ஒழிப்பு வாரத்தில் இராணுவத்தினர் இணைவு

[2017/07/04]

தற்போது நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் தேசிய டெங்கு ஒழிப்பு தொடர்பான நிகழ்ச்சித் திட்டங்களை முறைப்படுத்தி வினைத்திறன்மிக்க வகையில் அவற்றை முன்னெடுக்க இலங்கை இராணுவப் படையினர் ஒரு வார டெங்கு ஒழிப்பு நிகழ்ச்சித்திட்டத்தினை அண்மையில் (ஜூலை, 01) முன்னெடுத்துள்ளனர். குறித்த நிகழ்வு கொழும்பு சுகததாச விளையாட்டரங்கிற்கு அருகாமையிலுள்ள சுகாதார வைத்திய அதிகாரிகள் காரியாலைய வளாகத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இராணுவத்தகவல்கள் தெரிவிக்கின்றன.

மக்கள் அதிகமாக வசிக்கும் மட்டக்குளிய பகுதியில் கொடிய டெங்கு பரவாமலும் அதனை அடையாளம் கண்டு அழிக்க நடவடிக்கையினை மேற்கொள்ளும் வகையிலும் இத்திட்டத்தில் 25 காவல் துறையினர், 25 பொது சுகாதார பொது சுகாதார பரிசோதகர்கள் மற்றும் 200 இராணுவ வீரர்கள் உள்ளடங்கலாக 25 குழுக்கள் செயட்பட்டுவருகின்றனர்.

இத்திட்டமானது இராணுவத்தளபதியின் வழிகாட்டலின்கீழ் மேற்கு பாதுகாப்பு படை தலைமையாகத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. குறித்த டெங்கு ஒழிப்பு செயதிட்டம் எதிர்வரும் சனிக்கிழமை (ஜூலை, 08) வரை முன்னெடுக்கப்படும். இத்திட்டம் கடந்த சனிக்கிழமை மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க, மேஜர் ஜெனரல் லக்சிரி வதுக்கே, சிரேஷ்ட காவல்துறை அதிகாரிகள், சுகாதார பரிசோதகர்கள், சுகாதார அமைச்சு, மருத்துவ அதிகாரிகள் மற்றும் கொழும்பு மாநகர சபை அதிகாரிகள் ஆகியோர் முன்னிலையில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

     



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்