››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

பாதுகாப்பு செயலாளரின் பிரியாவிடை வைபவம்

பாதுகாப்பு செயலாளரின் பிரியாவிடை வைபவம்

[2017/07/05]

பாதுகாப்பு செயலாளர் பதவியிலிருந்து விடைபெற்றுச் செல்லும் பொறியியலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி அவர்களுக்கான பிரியாவிடை வைபவம் பாதுகாப்பு அமைச்சின் கேட்போர் கூடத்தில் இன்று (ஜுலை, 05) இடம்பெற்றது. மேலும் அதனையொட்டியாதாக பாதுகாப்பு அமைச்சின் சேவாவனிதா பிரிவின் தலைவி திருமதி வசந்தா குணவர்த்தன அவர்களின் பிரியாவிடை நிகழ்வும் இடம்பெற்றது.
குறித்த இந்நிகழ்வு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ. ருவன் விஜேவர்தன அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்விற்கு வருகை தந்த பாதுகாப்பு செயலாளரை பாராளுமன்ற விவகாரங்கள், கொள்கை மற்றும் திட்டமிடல் பிரிவின் மேலதிக செயலாளர் திரு. ஆர்பிஆர். ராஜபக்ஸ அவர்கள் வரவேற்றார்.

இப்பிரியாவிடை நிகழ்வின் போது உரையாற்றிய பாதுகாப்பு செயலாளர் தான் பாதுகாப்பு செயலாளராக கடைமையாற்றிய காலப்பகுதியில் தமது பணி குறித்து திருப்தியடைந்ததாகவும் அதற்காக ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் தான் நன்றி தெரிவித்துக்கொள்வதாகவும் குறிப்பிட்டார்.

இந்நிகழ்வில் உரை நிகழ்த்திய பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பாதுகாப்பு செயலாளராக பொறியியலாளர் ஹெட்டியாராச்சி அவர்களினால் ஆற்றப்பட்ட சேவைகளைப் பாராட்டியதுடன் தேசிய பாதுகாப்பு தொடர்பில் அவரால் ஆற்றப்பட்ட சேவைகள் சிறந்த முன்னுதாரணமாகவுள்ளது எனவும் குறிப்பிட்டார். அத்துடன் வெளிநாட்டு தூதுதுவராக நியமனம் பெற்றுள்ள பொறியியலாளர் ஹெட்டியாராச்சி அவர்களுக்கு தனது வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொண்டார்.

இந்நிகழ்வின் சிறப்பம்சமாக பாதுகாப்பு படை அதிகாரிகள் மற்றும் சிப்பய்களினால் விடை பெற்றுச் செல்லும் பாதுகாப்பு செயலாளருக்கு உயர் பிரியாவிடை கௌரவம் அளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

பொறியியலாளர் ஹெட்டியாராச்சி கடந்த 2015ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 9ம் திகதி பாதுகாப்பு செயலாளராக கடமை ஏற்றுக்கொண்டார்.
இந்நிகல்வில் விமானப்படைத் தளபதி, பாதுகாப்பு அமைச்சின் இராணுவ இணைப்பு அதிகாரி, அமைச்சின் அதிகாரிகள், முப்படைகளின் சிரேஷ்ட அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

     
     
     செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்