››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

“செமட செவன” வீடுகளை கையளிக்கும் நிகழ்வில் ஜனாதிபதி பங்கேற்பு

“செமட செவன” வீடுகளை கையளிக்கும் நிகழ்வில் ஜனாதிபதி பங்கேற்பு

[2017/07/06]

அலரிமாளிகையில் இன்று (ஜூலை, 06) இடம்பெற்ற “செமட செவன” விருசுமிதுரு வீடுகளை கையளிக்கும் நிகழ்வில் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.

குறித்த இந்நிகழ்விற்கு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ. ருவன் விஜேவர்தன அவர்களும் வருகைதந்திருந்தார்.

இந்நிகழ்வு மங்கள விளக்கேற்றும் வைபவத்துடன் ஆரம்பிக்கப்பட்டபின்னர் தாய் நாட்டிற்காக உயிர்த்தியாகம் செய்த படைவீரர்களுக்காக இரண்டு நிமிடம் மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்த ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்கள் உரையாற்றும் போது, நாட்டில் இடம்பெற்ற யுத்தத்தினை முடிவுக்கு கொண்டுவந்து சமாதானம் மற்றும் சுதந்திரத்தை நிலைநாட்ட நாட்டுக்காக தமதுயிரை தியாகம் செய்த படைவீரர்களின் நலனுக்காக முன்னெடுக்கப்பட்டுவரும் விருசுமிதுரு வீட்டுத்திட்டம் தொடர்பாக தான் மிகவும் சந்தோசப்படுவதாக தெரிவித்தார். தற்போதைய அரசாங்கம் யுத்தவீரர்களின் நலன்புரி நடவடிக்கைகளை அதிகரித்துள்ளதாகவும் அதனை தொடர்ச்சியாக முன்னெடுக்கவுள்ளதாகவும் இதன்போது தெரிவித்தார். அத்துடன் குறித்த விருசுமிதுரு வீட்டுத்திட்டமானது யுத்த வீரர்களின் வீட்டுப்பிரச்சினக்கு தீர்வாக அமையும் என்பதாகவும் அவர் இங்கு குறிப்பிட்டார். இத்திட்டத்தில் ஈடுபடும் அனைத்து அரச முகவர்களுக்கும் தனது நன்றியையும் தெரிவித்தார்.

இந்நிகழ்வின்போது முப்படையினர், காவல்துறையினர் மற்றும் சிவில் பாதுகாப்பு திணைக்களத்தைச் சேர்ந்த பயனாளிகளுக்கு 192 வீடுகள் வழங்கிவைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் கௌரவ சஜித் பிரேமதாச, பிரதி அமைச்சர், ரணவிரு சேவா அதிகாரசபையின் தலைவி திருமதி. அனோம பொன்சேகா, பொலிஸ்மா அதிபர், சிரேஷ்ட பாதுகாப்பு அதிகாரிகள், பயனாளிகள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்