››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

இராணுவத்தினரினால் இலவச மருத்துவ முகாம்

இராணுவத்தினரினால் இலவச மருத்துவ முகாம்

[2017/07/07]

இராணுவத்தினர், டெங்கு நோயாளர்களின் இரத்த மாதிரிகளை இலவசமாக பரிசோதனை செய்யும் புதிய மருத்துவ ஆய்வு கூடம் ஒன்றை நீர்கொழும்பு வைத்தியசாலையில் நிறுவியுள்ளதாகவும் இவ்வாறு நிறுவப்பட்ட குறித்த மருத்துவ ஆய்வு கூடத்தில் சுமார் 1500ற்கும் மேற்பட்ட பொதுமக்கள் தமது இரத்த மாதிரிகளை இலவசமாக பரிசோதனை செய்துகொண்டதாகவும் இராணுவ தகவல்கள் தெரிவிக்கிறன.
புதிதாக நிறுவப்பட்ட மருத்துவ ஆய்வுகூடத்தில் இலங்கை இராணுவத்தின் மருத்துவ படையணி தமது மருத்துவ உபகரணங்கள் சகிதம் தமது பணிகளை ஆற்றிவருகின்றனர்.

டெங்கு நோயினால் வெகுவாக பாதிக்கப்பட்ட நீர்கொழும்பு பிரதேசத்திற்கு விஜயம் செய்த ஜனாதிபதியிடம் குறித்த மருத்துவ ஆய்வுகூடம் தொடர்பான தேவை முன்வைக்கப்பட்டது. இக்கோரிக்கைக்கு உடனடி தீர்வினைப் பெற்றுக்கொடுக்கும் வகையியல் குறித்த செயற்றிட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் டெங்கு நோயாளர்களை கண்காணிக்கும் வகையில் புதிய இரண்டு வாட்டுக்களும் இலங்கை இராணுவத்தினரினால் குறித்த வைத்தியசாலை வளாகத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.

ஜனாதிபதி செயலகத்தினால் நிதியனுசரனையளிக்கப்பட்ட குறித்த ஆய்வுகூட நிர்மாணப் பணிகள் இலங்கை கடற்படையினரின் உதவியுடன் இராணுவத்தினரால் 2-3 நாட்களில் நீர்கொழும்பு வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதேவேளை, சுமார் 260ற்கு மேற்பட்ட இராணுவ வீரர்கள் கொழும்பு, கடுவெல, பிலியந்தல, ஹன்வெல்ல, ஹோமகம மற்றும் கஹதுடுவ ஆகிய பிரதேசங்களில் டெங்கு ஒழிப்பு நடடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அத்துடன் களுத்துறை மற்றும் கம்பஹா மாவட்டத்தில் உள்ள மீரிகம, தொம்பே, பியகம, களனி, அத்தனகல்ல, மத்துகம, வாதுவ மற்றும் பண்டாரகம ஆகிய பிரதேசங்களில் மேற்கு பாதுகாப்பு படை தலைமையகத்தைச்சேர்ந்த 250ற்கு மேற்பட்ட இராணுவத்தினர் டெங்கு ஒழிப்பு நடடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

 

டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளுக்கு உதவும் வகையில், கொழும்பில் காணப்படும் நீரேந்துப்பகுதிகளை சுத்தப்படுத்தும் நடவடிக்கைளில் இலங்கை கடற்படையினர் மேற்கொண்டுவருகின்றனர். இவர்கள் குறித்த நீரேந்துப்பகுதியில் சேர்ந்துள்ள சேறு, மண், குப்பை கூளங்கள் மற்றும் புற்புதர்கள் ஆகியவற்றை அகற்றுவதன் மூலம் நீர் வழிந்தோடகூடிய வழிவகைகளை ஏற்படுத்தி வருகின்றனர்.

மே மாதம் 31 ஆம் திகதி முதல் செயற்படுத்தி வரும் குறித்த திட்டத்தின் மூலம் வத்தளை, களனி, பேலியகொட மற்றும் கெரவலப்பிட்டிய ஆகிய பிரதேசங்களில் சேர்ந்துள்ள மண், குப்பை மற்றும் புற்புதர்கள் ஆகியவற்றை அகற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்