››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

கடற்படையினரால் மேலும் இரு குடிநீர் சுத்திகரிப்பு நிலயங்கள்

கடற்படையினரால் மேலும் இரு குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள்

[2017/07/09]

அண்மையில் (ஜூலை, 07) சிறுநீரக நோயினால் அதிகம் பாதிக்கப்பட்ட தானமளவில மற்றும் பொல்பிதிகம ஆகிய இரு பிரதேசங்களில் இலங்கை கடற்படை அதன் சமுக நலன் அபிவிருத்தி திட்டங்களின் அடிப்படையில் மேலும் இரண்டு குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் நிறுவியுள்ளதாக கடற்படை தகவள்கள் தெரிவிக்கின்றன.

இதன்பிரகாரம் குறித்த நிலையங்கள் மூலம் முறையே சுமார் 120 மற்றும் 475 குடும்பங்கள் பயன்பெறவுள்ளனர். குறித்த பிரதேசங்களில் சிறுநீரக நோய்களிலிருந்து பொதுமக்களைப் பாதுகாத்துக் கொள்ளும் வகையில் சிறுநீரக நோய் தடுப்புக்கான ஜனாதிபதி செயலணியினால் குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்களை நிறுவுவதற்கான நிதி அனுசரணை வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

இதுவரை நாடு பூராகவும் 226 குடி நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளன. இதன் மூலம் சுமார் 107,510 குடும்பங்கள் மற்றும் 80,185 பாடசாலை மாணவர்கள் உள்ளிட்டோர் சுத்தமான குடிநீரை பெற்று வருகின்றனர்.

     



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்