கிளிநொச்சியில் இராணுவத்தினரால் கண்சிகிச்சை முகாம்
[2017/07/08]

அண்மையில் (ஜூலை, 04) கிளிநொச்சி நேலும் பியச கேட்போர்
கூடத்தில் இப்பிரதேசத்தைச் சேர்ந்த பார்வைக் குறைபாடுகளையுடைய
பொதுமக்களுக்கான நடமாடும் கண்சிகிச்சை முகாம் ஒன்றினை 65வது படைப்
பிரிவினருடன் இணைந்து கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையக இராணுவத்தினர்
முன்னெடுத்துள்ளதாக இராணுவத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன்போது விஷன் கேயார் நிறுவனத்தின் கண் பரிசோதகர்கள்
மற்றும் அறுவை சிகிச்சை நிபுணர் களினால் பல்வேறு கண்பார்வை தொடர்பான
பிரச்சினைகளுடைய 244 பொதுமக்கள் கண் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதாகவும்,
அவர்களில் 210 பேருக்கு மூக்குக்கண்ணாடிகளும் 34 பேருக்கு வாசிப்பு
கண்ணாடிகளும் வழங்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிகழ்வில் கண் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு பார்வைக்
குறைபாடுடையோர் என இணங் காணப்பட்டவர்களுக்கான மூக்குக்கண்ணாடிகளை கொழும்பு
விஷன் கேயார் நிறுவனத்தினர் முற்றிலும் இலவசமாக வழங்கி வைத்தமை இங்கு
குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில், மேஜர் ஜெனரல் அஜித் காரிய கரவன, கிளிநொச்சி பாதுகாப்பு படைத்
தலைமையக கட்டளைத்தளபதி, மற்றும் பெரும் எண்ணிக்கையிலான சிரேஷ்ட அதிகாரிகள்
உள்ளிட்டோர் இச்சமூக சேவையில் கலந்துகொண்டனர்.
|