››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

முப்படைகளிலிருந்து தப்பிச் சென்ற வீரர்கள் நான்காயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது

முப்படைகளிலிருந்து தப்பிச் சென்ற வீரர்கள் நான்காயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது

[2017/07/11]

அனுமதியின்றி நீண்டகால விடுமுறையிலிருந்து சட்டரீதியாக விலகிச்செல்லாத முப்படை வீரர்களுக்கு எதிராக தொடர்ந்தும் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன்பிரகாரம் இராணுவ பொலிஸ் மற்றும் காவல்துறையினர் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையின் பிரகாரம் இதுவரை முப்படைகளிலிருந்து தப்பிச் சென்ற முப்படைவீரர்கள் நான்காயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 31ஆம் திகதி நல்லிரவு வரை அறிவிக்கப்பட்ட பொதுமன்னிப்பு காலத்தைப் பயன்படுத்தி சட்டரீதியாக விலகிச் செல்லாத 7 இராணுவ அதிகாரிகள் மற்றும் 4074 வீரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 7 இராணுவ அதிகாரிகள் 3241 இராணுவ வீரர்கள் 765 கடற்படை மற்றும் 68 விமானப் படை வீரர்களாவர். மேலும் இராணுவ பொலிஸ் மற்றும் காவல்துறையினர் இணைந்து தப்பிச் சென்றவர்களை கைதுசெய்யும் நடவடிக்கையினை தொடர்ந்தும் மேட்கொள்ளப்போவதாகவும் மற்றும் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கையினை மேட்கொள்ளப்போவதாகவும் இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் ரொஷான் செனவிரத்ன அவர்கள் தெரிவித்துள்ளார்.

அனுமதியின்றி நீண்டகால விடுமுறையிலிருந்து கடமைக்கு சமூகமளிக்காத முப்படை வீரர்களுக்கு சட்டரீதியாக கடமையிலிருந்து விலகுவதற்காக கடந்த ஆண்டு பாதுகாப்பு அமைச்சினால் இரு முறைகள் பொதுமன்னிப்புக்காலம் அறிவிக்கப்பட்டு கால அவகாசம் வழங்கப்பட்டது. அவ்வாண்டு டிசம்பர் மாதம் அறிவிக்கப்பட்ட பொதுமன்னிப்பு காலத்தைப் பயன்படுத்தி 34 இராணுவ அதிகாரிகள் மற்றும் 8843படைவீரர்கள் உள்ளிட்டோர் சட்டரீதியாக விலகிச் சென்றமை குறிப்பிடத்தக்கது.

தொடர்பான செய்திகள் >>

முப்படையிலிருந்து தப்பிச்சென்ற மேலும் பலர் கைது

முப்படையிலிருந்து தப்பிச்சென்ற 1200 பேர் கைது

முப்படையிலிருந்து தப்பிச்சென்ற 450 பேர் கைது

முப்படையிலிருந்து தப்பிச்சென்ற மேலும் பலர் கைது

பொது மன்னிப்பு காலம் இன்றுடன் நிறைவு

பொது மன்னிப்பு கால எல்லைக்குள் முப்படைகளிலிருந்து தப்பிச் சென்ற மேலும் பலர் சட்ட ரீதியாக விலக முறையீட

பொதுமன்னிப்பு காலம் சாதகமான நிலையில்

முப்படைகளிலிருந்து தப்பிச் சென்றவர்களுக்கான பொதுமன்னிப்புக் காலம் அறிவிப்பு

இராணுவத்திலிருந்த தப்பியோருக்கு பொது மன்னிப்புசெய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்