››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

சேவா வனிதா பிரிவின் புதிய தலைவி தமது கடமைகளை பொறுப்பேற்பு

சேவா வனிதா பிரிவின் புதிய தலைவி தமது கடமைகளை பொறுப்பேற்பு

[2017/07/13]

பாதுகாப்பு அமைச்சினுடைய சேவா வனிதா பிரிவின் புதிய தலைவி திருமதி சாலினி வைத்தியரத்ன அவர்கள் தமது கடமைகளை பாதுகாப்பு அமைச்சில் இன்று (ஜூலை, 13) இடம்பெற்ற நிகழ்வின்போது பொறுப்பேற்றுக் கொண்டார். இந்நிகழ்வில் பிரதித் தலைவி திருமதி ஐ டி வீரசிங்க மற்றும் பாதுகாப்பு அமைச்சினுடைய சேவா வனிதா பிரிவின் ஏனைய அதிகாரிகளும் கலந்து சிறப்பித்தனர்.

யுத்த வீரர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களுக்கு நலன்புரி நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில் பாதுகாப்பு அமைச்சில் சேவா வனிதா பிரிவு ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும். வீடுகள் அமைத்துக்கொள்வதற்கு நிதியுதவி வழங்குவது இதன் பிரதான நோக்கமாக காணப்படும் அதேவேளை, அவர்களின் குழந்தைகளுக்கு கல்வி புலமைப்பரிசில்கள், நலன்புரி சேவைகளை வழங்குதல் மற்றும் அவசர தேவைகளின் போது நிதியுதவிகளை வழங்குவதன் மூலம் தமது சேவைகளை மேற்கொள்கிறது. இச்சேவைகளை முப்படையின் சேவா வனிதா பிரிவு மற்றும் சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் நெருங்கிய ஒத்துளைப்புடன் முன்னெடுத்துவருகிறது.



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்